கோலாலம்பூர்:
முன்னாள் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் பிகேஆர் கட்சியிலிருந்து விலகி ‘பெர்சாமா’ கட்சியில் இணைந்தது சுபாங் தொகுதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், அது பிகேஆர் எதிர்கொள்ளும் ஆழமான சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிகேஆர் அதன் சீர்திருத்தவாத கொள்கையை இழந்து வருவதாகவும், நகர்ப்புற வாக்காளர்கள் மற்றும் சீர்திருத்த ஆதரவாளர்களைத் தன்வசம் தக்கவைத்துக் கொள்ளக் கட்சி தனது எதிர்கால திசையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வோங் சென்னின் இந்த நகர்வு பிகேஆருக்கு எண்ணிக்கை ரீதியாகப் பெரிய இழப்பை ஏற்படுத்தாவிட்டாலும், குறியீட்டு ரீதியாகவும் அதன் சீர்திருத்த அடையாளத்திற்கும் இது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
























