நடிகை மலைக்காவின் குடியிருப்புக்கு சீல்

கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனாலும் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மும்பையில் பிரபல இந்தி நடிகை மலைக்காவின் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் மலைக்கா வசித்த அடுக்கு மாடி குடியிருப்பையே தனிமைப்படுத்தி சீல் வைத்து விட்டனர். இதனால் மலைக்கா தவிப்பில் உள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் உயிரே என்ற பெயரிலும் இந்தியில் தில்சா பெயரிலும் வெளியான படத்தில் ‘தைய தையா‘ என்ற பாடலுக்கு மலைக்கா நடனம் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். இந்தி நடிகர் சல்மான்கான் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் உள்ளார். சில வருடங்களுக்கு முன்பு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவரை விவாகரத்து செய்து விட்டார்.

தற்போது 47 வயதாகும் மலைக்கா பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் 35 வயது மகன் அர்ஜூன் கபூரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here