இறைவன் உறங்கவில்லை

ஆலயங்கள் திறக்கப்படவிருக்கின்றன என்ற செய்தி ஓர் இனிப்பான செய்திதான். இறைவன் பற்றி எதிர்மறை கருதுகள் இந்தியர்களிடையே இருந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் இறை சிந்தனைக்குமலிறை நெறியாளர்களுக்கும் எற்படவில்லை என்பது உலகறிந்த செய்தி.

இறை எதிர்ப்பை எவர் செய்தாலும் பாறையில் மோதிய தலையாகத்தான் ஆகிவிடும். இதறகுச் சான்றுகள் தேவையில்லை. இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதை ஆன்மீக உணர்வோடு சொன்னாலும் சரி, அறியாமல் சொன்னாலும் சரி, இரண்டுக்கும் அர்த்தங்கள் வேறு. பொருள் ஒன்றுதான்.

எங்கும் இருக்கிறான் இறைவன் என்று அறியாதவர்கள் சொன்னால், அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இன்னும் பிற நாடுகளிலெல்லாம்  இறைவன் இருப்பதை உதாரணம் கூறலாம். இதையே இறை உணர்வோடு கூறினால் அதன் பொருள் ஆழமானது.

ஆலயங்கள் தறக்கப்படவிருக்கின்றன என்ற செய்தி பலருக்கு பசி தீர்ந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அது அறிவுப்பசி, ஆன்மீகப் பசிக்கான தருணம் இது. எப்போது வரும் என்றுதான் இத்தனை நாளும் காத்திருந்தார்கள்.

மக்கள் அடிக்கடி ஆலயங்கள் செல்வதில்லையே ! ஏன் அவசரப்படுக்கிறார்கள் என்ற குரலும் காதில் விழுகிறது. இதற்கு மேற்சொன்ன ஒரு வார்த்தை பொருந்தும். இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதுதான் அது. எங்கும் இருக்கும் இறைவன் நம் இல்லத்திலும் இருக்கிறான். இல்லம் இல்லமாக, நல் உள்ளமாக இருக்கும் எவரிடத்தும் இறைவன் வாழ்கிறான்.

தூரத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு அன்றாடம் செல்லமுடியாது என்பதால், உறவு இல்லையென்று ஆகிவிடாது. அடிக்கடி சென்றால் அது உறவைக் கெடுத்துவிடும்.

அதுபோலத்தான் இறைவன் ஒவ்வொரு இல்லத்திலும் உறவுபோல் உள்ளவன். செய்யும் கடமைகளை உருப்படியாகச் செய்தாலே போதும் இறைவன் அமரிக்காவிலிருந்தும் வாழ்த்துவான். இங்கிலாந்திலிருந்தும் ஆசி வழங்குவான்.

இறை ஆலயங்கள் தொலைத்தொடர்பு தூபிகளாக இருக்கின்றன. ஒன்றித்த உணர்வுகளைப் பெற்று மக்களுக்குப் பரப்பும் வேலையைச் செய்துகொண்டிருக்கின்றன.

கடந்த மூன்று மாதங்களாக இறை மின் அலைக்கற்றைகள் சரிவர செயல்படவில்லை என்பதால் சிந்தனை செயல்பட முடியாமல், ஏதோ ஒன்றை இழந்ததுபோல் ஆகிவிட்டார்கள். இது அனைவருக்குமானது அல்ல. தெய்வ சிந்ததனை உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

கைப்பேசிக்கு தொடர்பு கிடைத்தால், பேசும் குரலை அறியமுடியும், செய்தியைப் பெற முடியும். இறைச்சிந்தனை அலை சரியாக இருந்தால்தான் தொடர்பு சரியாக இருக்கும்.

ஆலயங்கள் பராமரிப்பு செய்யப்படுகின்றன. வழிபாடு என்பது முறையாக நடக்கும். திருமணங்கள் நடக்கும். பூசைகள் நடக்கும். இவையெல்லாம் சரிவர நடக்க மக்கள் புரிந்துணர்வும் மக்கள் கூடல் இடைவெளியும்  கடைப்பிடிக்க வேண்டுமே! புதிய மாற்றத்தை இறைவன் உருவாக்கியிருக்கிறான். மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here