திட்ட வரைவு திடமாகட்டும்

தொழிலாளர் மேம்பாட்டுத்திறன் என்பது பொருளாதார மீட்சிக்கு முக்கிய பங்காற்றும் என்பது கடந்தகாலங்களில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தொழில்திறன் பயிற்சிகள் மலேசியர்களை அடையாளம் காட்டும் மாபெரும் முயற்சி. மலேசியர்களைத் துள்ளியமாக அடையாளப்படுத்தும் முயற்சிக்கு இன்னும் பயிற்சிகள் போதவில்லை என்பதே பொதுவான கருத்து.

நவீன தொழிற்நுட்ப யுகத்தில் தொழில்துறை என்பது கருங்கல்லை சிலையாக்குவதல்ல. வார்ப்புகளைத் தொழில்நுட்பமாக மாற்றுவதில் சிலை உயிர்பெறவேண்டும் என்பதே!. கால விரயத்தைச் சுருக்குவதும் இதில் அடங்கும். இதனால் உற்பத்திகள் பெருகும் . உற்பத்திப்பெருக்கம் பொருளாதார மீட்சிக்கு உதவும். நாட்டின் கொள்கைக்கு பொருளாதார மீட்சி இன்றையமையாதது.

ஆனால், உற்பத்திப் பெருக்கம் என்பது நாட்டின் அடையாளத்தைக் காட்டுமா? ஒரு பொருள் எம். எஸ். என்று முத்திரையிடப்படும்போதே மலேசியத்திறன் அதில் இருக்க வெண்டுமே! மலேசியத்தயாரிப்புன உலகமெங்கும் பேசப்படவேண்டுமே!

குறிப்பாக பழையவை ஆனாலும் அதன் தொழில் நுட்பம் என்பது கைகளில் இல்லை. கைகளுக்குள் அடங்கியிருக்கும் ஆளுமைக் கருவிகளில்தான் இருக்கிறது. அந்தக் கருவிகளின் இயங்குதிறன் சுத்தியல் கொண்டு இயக்குவதல்ல. சுற்றியல் தொழில் நுட்பத்தால் இயக்குவதாக இருக்க வேண்டும். இத்திறன் போதுமானதாக இல்லை. இதை முழுமையாகப் பெறுவதில் தொடர்ச்சியான முயற்சிகள் இல்லை. அதனால் பயற்சிகள் இல்லை. பயிற்சிகள் இல்லாமையால் முயற்சிக்கும் வழியில்லாமல் போய்விடுகிறது.

கடந்தகால பயிற்சிகள் அனைத்தும் பெருங்காய முயற்சிகளாகத்தான் இருந்தன. வாசம் மட்டுமே உணரப்பட்டது. அதன் பலன் கைக்கெட்டவில்லை. மலேசியர்களின் திறன் தேர்வு 60 விழுக்காட்டை எட்டாதிருந்தது. என்ற கணிப்பும் இருந்தது. இதன் இன்றைய நிலை என்ன என்பதும் தெரியவில்லை.

தொழில்நுட்பத்திறன் மாற்றத்திற்கு பணியாளர்கள் மாற்றம்பெற சொக்சோ பெரும்பங்காற்ற முடியும். மனிதவள அமைச்சு இதற்கான திட்ட வரைவுகளைப் புத்தாக்கதுடன் செய்யும்.  அதில் எம் எஸ். அழுத்தமாக இருக்கும். அதற்கான காலம் தூரமில்லை. புதிய வரைவுகளுக்கு அர்த்தம் காணப்படுமானால் அகரதியில் மலேசியம் இடம்பெற்றுவிடும். 80 விழுக்காடு குறியாக அமையட்டும். 99.9 விழுக்காடு தானே அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here