சரவாக் மாநிலத்திலுள்ள பதின்ம வயதினரில் கிட்டத்தட்ட பாதிப்பேர் கோவிட் -19 தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்

கூச்சிங்: கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சரவாக்கிலுள்ள 12 முதல் 17 வயது வரையுள்ள மொத்தம் 121,030 பேர் அல்லது 41.3 விழுக்காடு இளைஞர்கள் கோவிட்-19 க்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

சரவாக் துணை முதல்வர் டத்தோ அமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ் இது பற்றிக் கூறுகையில், இதுவரை 231,803 பேர் அல்லது 79.1 விழுக்காடு பதின்ம வயதினர் கோவிட்-19 எதிராக முதல் தடுப்பூசியை பெற்றுள்ளனர். மாநிலத்திலுள்ள மொத்தம் பதின்ம வயதினரும் எண்ணிக்கை 295,174 பேர் ஆகும்.

சரவாக் மாநில பேரிடர் மேலாண்மை குழுவின் (JPBN) தலைவராகவும் இருக்கும் அவர், இந்த சாதனையை தொடர்ந்து, தாம் அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முன் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட அனைத்து இளைஞர்களையும் முழுமையாக தடுப்பூசி போட இலக்கு வைத்துள்ளது என்றார்.

சரவாக், 16 முதல் 17 வயது வரையிலான அனைத்து இளைஞர்களுக்கும் மற்றும் சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ள 12-15 வயதுடைய இளைஞர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியை இறந்த செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் செயல்படுத்தி வருகின்றது.

மேலும் “12 முதல் 15 வயது வரையிலான இளம் வயதினருக்கு, செப்டம்பர் 24, 2021 அன்று தடுப்பூசி போடத் தொடங்கியது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

பூஸ்டர் டோஸ் ஊசியைப் பொறுத்தவரை, இதுவரை முதியவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்னணி பணியாளருக்கும் என மொத்தமாக 11,156 பேரும் பெற்றுள்ளனர் என்றும் உக்கா கூறினார்.

மேலும் கடந்த “அக்டோபர் 13 ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸை செலுத்தும் பணியை தொடங்கியது மற்றும் மூத்த குடிமக்கள் தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸை அவர்கள் பெற்று வருகின்றனர் என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சரவாக்கில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்கள் 90.7 விழுக்காட்டினர் தமது இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். அதே நேரத்தில் 12 முதல் 17 வயது வரையான பதின்ம வயதினரில் 70.1 விழுக்காட்டினர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here