பொதுப்பணி ஊழியர்கள் இப்பொதுதான் வெளிப்பார்வைக்கு அதிகமாக வந்திருக்கிறார்கள் போன்ற தோற்றம் நிலவுகிறது.
மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி காலத்தில் அவர்களும் அச்சத்தோடுதான் இருந்தார்கள். பாதுகாப்பு இல்லாமையில் அவர்கள்தாம் முதல் வரிசையில் இருக்கிறார்கள் என்பது பலருக்கு உணர்வே இல்லை
வீசப்படும் முகக்கவசங்களை அப்புறப்படுத்துவதில் யாரும் துணியாத சேவையை அவர்கள் தான் அப்புறப்படுத்துகிறார்கள். வாய்க்கால் சுத்தப்படுத்துவது, புல்வெட்டுதல் என்பது அவர்களின் வேலையாக இருந்தாலும் பாதுகாப்பு என்று வரும்போது அது குறைவாகவே இருந்தது.
அவர்களுக்கு வெப்ப சோதனை செய்யப்படாமலும் இருந்தது. டிங்கி கொசுத்தொல்லைகளில் அவர்களின் பாதிப்பே அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும் வேலை, வருமானம், குடும்பம் என்றெல்லாம் அவர்கலுக்கும் இருக்கிறது. ஆனாலும் துணிவாகச் சுத்தப்பணிகளைச் செய்தார்கள். செய்தும் வருகிறார்கள்.
பாதுகாப்புக்காக உழைக்கின்ற அவர்கள் பாதுகாப்பாக இல்லை என்பதுதான் கூடுதல் வருத்தம்.
அவர்களும் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும். மருத்துவம் அவர்களைத்தேடி வரவேண்டுமல்லவா?