செடிகளுக்கும் சான்றிதழ்

செடிகள் என்றால் மருத்துவம் என்பதற்குச் சான்றாக இருந்து வந்தது. சில செடிகள் விஷத்தன்மை வாய்ந்தவை என்பதை பொதுவாக அறிந்திருக்கலாம். ஆப்பரிக்க நாடுகளின் காடுகளில் உயிர்களைக் கொல்லும் செடிகளும் மனிதர்களையே விழுங்கிவிடும் பூக்களும் உண்டு என்பது உலகப் பூகோள பாடம் உணர்த்தியிருக்கிறது.

மலேசியர்களுக்கு அதிர்ச்சிதரும் ஒரு செய்தி வீட்டில் வளர்க்கும்  செடிகள் மூலம் வருகிறதென்றால் தெனாலி ராமன் வளர்த்த பூனை கதையாகத்தான் உணரமுடிகிறது.

பாம்பு செடி என்று ஒருவகை. பார்ப்பதற்கு மிக அழகான பச்சை நிற பாத்திக் தோற்றத்தில் இருக்கும்.

பெரும்பாலும் வீட்டிற்குள், வெளிப்புறத்தில், தோட்டங்களில் வளர்க்கும் செடிகளும் இருக்கின்றன. இதில் வளர்க்கவே கூடாத செடிகளும் இருக்கின்றன, அதன் பெயரைக்கூடச் சொல்லக்கூடாது. (மூச்… அதுபற்றிப்பேசவும் கூடாது)

வீட்டின் வெளிப்புறத்திலும். உட்புறத்திலும் வளர்க்கின்ற, வளர்க்கின்ற செடிகள் அதிகம். அதில் ஒன்று உடல் நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தம் என்ற குறிப்பைக் காட்டியிருக்கிறது. இச்செடி  நுண்ணுயிரிகளைப் பெருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்படிருக்கிறது.

சில செடிகள் இரவிலும் சில செடிகள் பகலிலும் உதவக்கூடியவை.  மர வகைகளில் பெரும்பாலானவை இரவில் தீய காற்றைத் தரக்கூடியவை. அதுபோல செடிகளும் மனித உயிர்களுக்குத் தீங்கு விளைப்பதற்குத் தயாராகிவிட்டனபோல் புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.

மனித உயிர்களுக்கு அதிகமான மிரட்டல்கள் தரும் வரிசையில் செடிகளும் இருக்கின்றன. அதில் ஒன்று இப்போது அறியப்பட்டிருறது. அதன் தாவரப்பெயர் சன்சீவியா ட்ரிஃபாசியாட்டா என்பதாகும்.

இதை சாதாரணமா ஒரு வகை கற்றாழை என்பர். சுலபமாக பாம்புச்செடி என்று அடையாளப் பெயரிட்டும் கூறுவர். வீட்டில் வளர்க்கும் செடிகளை ஆய்வுக்கு அனுப்பி, ஒவ்வொன்றுக்கும் சான்றிதழ் பெறும் காலம் வேகு தொலைவில் இல்லை.

என்பதால் மருத்துவச்செடிகளுக்கு உரிமம் பெற இப்போதே முந்துங்கள். பல்லாங்குழி, அதிரசம், முறுக்கு போல் உரிமப் பிரச்சினைகள் எழலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here