தாய்லாந்தில் அதிர்ஷ்ட குலுக்கல்!
தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் குலுக்கல் முறையில் பசுமாடு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
தாய்லாந்து நாட்டின் சியாங் மாய் மாகாணம், மா சியேம் மாவட்டத்தில் இரண்டாவது வாரமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குலுக்கல் முறையில் 65 வயதான இங்கம் தொங்காம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு, ஒரு வயதுடைய பசுமாடு வழங்கப்பட்டது.
குலுக்கள் முறையில் வழங்கப்படும் பசுமாட்டை மறுவிற்பனை செய்யவோ, கொல்லவோ கூடாது. இதுவரை 27 பசுமாடுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டுள்ளன.
6 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தாய்லாந்தில் இதுவரை 47 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.







