விடுதலைப் போராட்ட பிரார்த்தனை

பாலஸ்தீனர்களின் நல்வாழ்வு குறித்த சிந்தனைக் குரலை எப்போதும் எடுத்துரைப்பதில் மலேசியா பின் வாங்கியதே இல்லை. என்று பேரரசர் தெரிவித்திருக்கிறார்.

பாலஸ்தீனர்களின் நிலங்கள் ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்பதில் மலேசியா அக்கறையுடன் இருக்கிறது. இதற்காக  பிரார்த்தனை செய்வதாக பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தாஃபா பில்லா ஷா தெரிவித்திருப்பதை அரண்மனை செய்தியாளர் கூறியிருக்கிறார்.

பாலஸ்தீனியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மலேசியா தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது. பாலஸ்தீனியர்களின் முயற்சிக்கு பல இஸ்லாமிய அமைப்புகளும் ஒத்துழைப்பும் கொடுத்து வருகின்றன.

இஸ்ரேலியர்களால் ஒடுப்பட்டுவரும் பாலஸ்தீனியர்களின் நிலங்கள் ஒருக்கிணைக்கப் படுவதில் மலேசியா என்றும் பின் வாங்கியதில்லை என்று பேரரசர் தமது பிரார்த்தனை செய்தியில் தெரிவித்திருப்பதை அரண்மனைச் செய்தியாளர் டத்தோ அஹ்மட் பாஃட்சில் ஷம்சுடின் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாலிஸ்தீனியர்கள் விடுபடவேண்டும் என்பதே இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here