அன்புள்ள ஆசீர்வாதம்!

சில மாதங்களாக குடும்பங்களைச் சந்திக்க முடியவில்லை என்பதில் பலரின் வருத்தம் மன இறுக்கத்தில் இருந்தன.

எஸ்.ஒ.பி தளர்த்தப்பட்டதும் பலரின் பயணக் கனவுகளுக்கு  வழிகிடைத்தது. ஆனால் இம்முறை பயணம் முன்புபோல் அமையாது. பாதுகாப்பு என்ற ஒன்று கூடவே பயணம் செய்யவேண்டும். பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்வது எஸ்.ஓ.பி. பின்பற்றுதலாக இருக்காது,

முன்பெல்லம் திடீர் வருகை என்பது மகிழ்ச்சியானதாக இருக்கும் . இப்போது அப்படியிருக்க வாய்ப்பில்லை. திடீர் வருகையால் மூத்தவர்கள் மனநிலை பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது

தூரத்தில் இருக்கும் பெற்றோர்களைக் காண்பதில் மகிழ்ச்சி இருந்தாலும்  சுகாதாரம் முன்னதாய் எச்சரிக்கை செய்துகொண்டே இருக்கிறது. மூத்தவர்களுக்கு அதிர்ச்சியில்லமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.

பல கிலோமீட்டர் தொலைவு கடந்துபோகும்போது தொடுகின்ற இடங்கள், ஓய்விடங்கள், உணவகங்களைக் கடந்துதான் போக வேண்டும். கடந்துபோகும் இடங்களில் கண்ணுக்குத்தெரியாத பாதிப்பு மிகுந்திருக்கும். அதே போக்கில் போய்ச்சேர முடியாது. ஆதலால் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டு மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளியைப் பின்பற்றும்படி தெரிவிப்பது ஒரு முன்னேற்பாடாக இருக்கும்.

தந்தையர் தினத்தில் பலரின் பயணம் திட்டமிடப்பட்டிருக்கும். தந்தையர்கள் மகிழ்ச்சியும் பயணத்தில் இணைந்திருக்கும். அதில்  தாயின் பாசமும் இருக்கும்.

அவர்களைத்தழுவும் பாக்கியம் கிடைக்காது, ஆசிபெறவும் முடியாது. பரிசுகள்  மட்டுமே அன்பை வெளிப்படுத்தும்.  வெப்பக் கருவிகள் இருந்தால் அச்சதிற்கு மருந்தாக இருக்கும்.

பெற்றோரின் புன்சிரிப்பே ஆசிர்வாதமாக அமையும். இவற்றியெல்லாம் அனுபவிக்க பாதுகாப்பான பயணம் தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here