கூப்பினால் வருமோ கொரோனா?

கூப்பு என்பது கைகூப்பவதைக் குறிக்கின்றது, கைகூப்புவதை இந்திய பாரம்பரியம் என்று கேலி செய்தவர்கள் இன்று கேள்வியாய் நிற்கிறார்கள்.

சங்க காலத்தே கைகூப்புவதை பழக்கமாகக் கொண்டிருந்தவர்கள் தமிழ்மக்கள். தமிழ் மக்கள் எதையும் அறியாமல் செய்ய வில்லை. செய்ததுமில்லை பகுத்தறிந்து கடைப்பிடித்தவர்கள் என்பது கட்டுக்கதையல்ல. உலகை எட்டும் கதை.

அப்போதெல்லாம் கைகுலுக்கும் பழக்கமே பரவலாக மேலோங்கி வளர்ந்தது. தமிழன் அதை விரும்பவே இல்லை, மன வளத்துறைகளிலும் கை குலுக்குவது தவிர்க்கப்படுகிறது. கட்டிப்புடியும் சரியான வழிமுறை அல்ல என்று தமிழர்கள் கூறினார்கள். பிறந்த குழந்தையை மூன்று மாதம் வரை தாயைத் தவிர பிறர் கொஞ்சுவது  தவறு என்று தமிழ் தர்மம் கூறுகிறது. இவற்றையெல்லாம் கடைப்பிடித்ததினால்தான் மருத்துவம் இன்றி நீண்ட நாள் வாழ்ந்தார்கள். தமிழ் என்ற வார்த்தையே மருத்துவம் என்றார்கள். அதில் உடலை இஅய்க்கும் சக்தி ஒலி இருக்கிறது.

கொரோனா போன்ற கொடுமையான தொற்றுகள் அன்றும் இருந்தன ஆனாலும் தமிழர்கள் அஞ்சியதில்லை. பிறர்பால் கெஞ்சியதில்லை. மரபு, பண்பாட்டையே மருந்தாக்கிக் கொண்டார்கள். அதிகம் கடைப்பிடித்தார்கள். நோய் தொற்றவில்லை.

வீட்டின் முன் சாணி மெழுகினார்கள். அதற்குக்காரணம் வலுவாக இருந்தது. வீட்டின் திண்ணை முன் அமர்ந்து பேசிகின்றவர்கள் பலதரப்பு மனிதர்கள். அவர்கள் துப்பும் எச்சிலில் கிருமிகள் இருக்கும். விடியற்காலையில் பிள்ளைகள் ஓடிவந்து மண்ணில்தான் விளையாடுவார்கள். அதைத் தடுக்கவே குடும்பப்பெண்கள் அதிகாலையில் சாணி மெழுகினார்கள். பாதுகாப்புக்காக கோலம் போட்டார்கள். அதில் கலையும் இருந்தது. சாணி கழிவு அல்ல. இயற்கை கிருமிநாசினி.

சாணியை கிருமிநாசினி  என்று கண்டுபிடித்தவர்கள் அன்றைய தமிழ்க் குடும்பப்பெண்கள் என்றால் அவர்களுக்கு விஞ்ஞானம் கற்றுக்கொடுத்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்?

இன்றைய கிருமித்திரவம் போல் விஷமானது அல்ல சாணி. கிருமிகளைச் சா நீ என்று சொல்வதுபோலும் கொள்ளலாம் அல்லவா?

கைகூப்புக்கும் விஞ்ஞானம் இருக்கிறது. தன்முணைப்பாளர்களுக்கு அது தெரியும். அதில்தான் தொற்று அண்டாமைத் தத்துவமும் இருக்கிறது. அதைக்கடைப்பிடித்தால் தொற்று வராது, தச்ர்ந்தும் வராது.

கைகூப்புவதை மேற்கத்தியர்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here