திமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில வாரங்களாக ஆயிரத்திற்கும் மேல் சென்ற பாதிப்பு நேற்று மட்டும் ஆயிரத்திற்குள் வந்துள்ளது.
இந்நிலையில் இன்று திமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வி.பி.கலைராஜன் தியாகராய நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.