53 வயதில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பெண்

துமகூரு மாவட்டம் சிரா டவுனை சேர்ந்தவர் கோவிந்தப்பா. இவரது மனைவி விஜயலட்சுமி(வயது 53). இந்த தம்பதிக்கு 11 வயதில் மகன் உள்ளான். அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விஜயலட்சுமி கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சிராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு விஜயலட்சுமிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அது ஆண் குழந்தைகள் ஆகும். விஜயலட்சுமிக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தைகள் பிறந்திருந்தது.

இதுபற்றி டாக்டர் கூறுகையில், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தற்போது கர்ப்பமடைவது அரிதாக தான் நடக்கிறது. ஆனால் விஜயலட்சுமி 53 வயதில் கர்ப்பம் அடைந்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர். குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளது, என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here