(செய்தி, படம் : எஸ்.ஷாண்)
கிள்ளான்:
“நமது பகுதி, நமது பொறுப்பு” என்ற கருப்பொருளுடன், GM Klang பேராங்காடி நிறுவனம் அப்பகுதியில் உள்ள பண்டார் பொத்தானிக் சுற்றுவட்டாரத்தில் ‘ஃபன் அண்ட் ஃபிரெஷன் அப் 2.0’ என்ற சமூகத்தூடன் தூய்மைப் பணி நேற்று கைக்கோர்த்தது.
இந்த தூய்மை பணி கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் அஸ்வான் அடாம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

நிறுவனத்தின் சமூகப் பொறுப்புத் திட்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள், மக்கள் உட்பட சிறுவர்கள் ஒன்றிணைந்து சுற்றுப்புறத் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். மலேசிய மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடனும், ‘எர்த் வாரியர்ஸ்’ சங்கத்தின் ஆதரவுடனும் GM Klang இத்திட்டத்தை மேற்கொண்டனர் என இந்நிறுவனத்தின் செயல்முறை அதிகாரி ஃபூ லொக் பிங் கூறினார்.
‘மலேசியத் தூய்மை தினம், ‘எர்த் வாரியர்ஸ் தினம் 2026’ ஆகிய முன்னிட்டு, இரண்டாவது முறையாக இந்த தூய்மைப் பணி நடத்தப்பட்டது. பகிர்ந்து பயன்படுத்தப்படும் சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பராமரிப்பதில் பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகிய அமைப்புகளின் பங்கேற்பை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் 26ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ‘மலேசியத் தூய்மை தினம் 2026’ நடவடிக்கையில் இரண்டு லட்சம் மலேசியர்களைப் பங்கேற்கச் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய்மை என்பது நமது வாழ்க்கையில் ஒரு அன்றாடப் பழக்கமாகவும் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகவும் மாற்றும் முயற்சியாக இந்த தூய்மைப் பணி முன்னெடுக்கப்படுகிறது என பத்திரியாளர் சந்திப்புக் கூட்டத்தின் போது அவர் சொன்னார்.
குடியிருப்பு, வணிக நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், பல்வேறு சமூக நடவடிக்கைகள் நிறைந்த பகுதியாக பண்டார் பொத்தானிக் திகழ்கிறது. இப்பகுதியின் தூய்மையையும் வசதியான சூழலையும் தொடர்ந்து பேணுவதற்கு அனைத்துத் தரப்பினரின் கவனமும் பங்களிப்பும் அவசியம் என்றார் அவர்.
தினமும் ஏராளமானோர் வருகை தரும் GM Klang பேரங்காடிக்கு கிள்ளான் பகுதியின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
GM Klang பேராங்காடி நிறுவனத் தொடர்பு, மக்கள் தொடர்புத் துறையின் மூத்த மேலாளர் நோர்சுஹைடா ஒத்மான் கூறுகையில், சமூகப் பொறுப்பு என்பது ஒரு நிகழ்ச்சியை நடத்துவதுடன் முடிந்துவிடக் கூடாது பண்டார் பொட்டானிக், கிள்ளான் சமூகத்தின் ஓர் அங்கமாக விளங்கும் என்றார் அவர்.

GM Klang-ன் பேரங்காடியின் பங்கு வர்த்தக நடவடிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஆகிய நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் சுற்றுச்சூழலுக்கு நேரடியாகப் பங்களிக்கவும் விரும்புகிறோம்.
“இத்திட்டத்தின் வாயிலாக மேலும் அதிகமானோர் களத்தில் இறங்கித் தூய்மையை ஒரு பண்பாடாகவும் கூட்டுப் பொறுப்பாகவும் கடைப்பிடிக்க முன்வருவார்கள் என தாம் நப்புவதாக அவர் கோடிக்காட்டினார்.
டிஎஸ்ஐ விளையாட்டுக் கழகம், வியூகப் பங்காளிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பங்கேற்பு இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியதாகவும், கூட்டு முயற்சியால் பண்டார் பொட்டானிக் சமூகத்திற்கு அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த தூய்மைப் பணியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் அஸ்வான் அடாம் கூறுகையில், ஒரு பகுதியின் தூய்மை உள்ளாட்சி மன்றத்தின் பொறுப்பு மட்டுமல்ல. பொதுமக்கள், வணிக உரிமையாளர்கள், தனியார் துறையினர், சங்கங்கள், இளைஞர்கள் ஆகிய அந்த இடத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு தனிநபரின் ஒத்துழைப்பும் அதற்கு அவசியமாகும் என்றார் அவர்.
அதுமட்டுமின்றி, தனது ஊழியர்களை, உள்ளூர் மக்களையும் இத்தூய்மைப் பணியில் இணைத்துக்கொண்ட GM Klang அணுகுமுறையை அவர் பாராட்டி, இதுபோன்ற நல்ல திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, மற்ற நிறுவனங்களும் சமூகங்களும் பின்பற்றக்கூடிய பண்பாடாக வளர வேண்டும் என்றும் அஸ்வான் அடாம் நம்பிக்கை தெரிவித்தார்.
‘ஃபன் அண்ட் ஃபிரெஷன் அப்! 2.0’ திட்டத்தின் வாயிலாக சமூக அடிப்படையிலான ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தவும், தூய்மைப் பண்பாட்டை வலுப்படுத்தவும் GM Klang இலக்கு கொண்டுள்ளது. மேலும், பண்டார் பொத்தானிக் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிள்ளான் பகுதியில் தூய்மையான, வசதியான, நிலைத்தன்மை கொண்ட சுற்றுச்சூழலை உருவாக்கவும் இத்திட்டம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

















