ஒரே நாளில்இத்தனை பேருக்கு கொரோனாவா? – திணறும் மகாராஷ்டிரா

அந்த தகவலின் படி, மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3 ஆயிரத்து 307 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,315 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 651 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here