கேரள டாக்டரை தாக்கிய பிரபல நடிகை கைது…

கொச்சி, கொச்சியில் டாக்டர் ஒருவரை தாக்கியதாக நடிகை அதுல்யா சந்திரா கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ், மலையாள திரையுலகில் பிரபல நடிகையான அதுல்யா சந்திரா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 வயதான இளம் டாக்டர் ஒருவரை தொடர்பு கொண்டு தனது உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்தார்.

இதைக்கேட்டு அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற டாக்டரை நடிகை அதுல்யா சந்திரா உள்பட 12 பேர் தாக்கினர். தாக்கியதுடன் அவரிடம் இருந்த ரூ.3.25 லட்சம் மதிப்புள்ள 2 செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச், இயர் பாட்ஸ் ஆகியவற்றை திருடி சென்றனர். மேலும் ரூ.6 கோடி தராவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் டாக்டரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டாக்டர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகை அதுல்யா சந்திரா உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here