இந்தியாவை நேபாளம் உரசுவதற்கு சீனா மட்டும் காரணமில்ல. குட்டி நாட்டுக்கு கொடுக்கு முளைக்க என்ன காரணம்?
இந்திய நிலப்பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதிகளை தங்கள் நாட்டு வரைபடத்துடன் இணைத்து, நேபாளம் நாட்டு அரசு நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்தியாவின் அண்டையிலுள்ள, குட்டி நாடான நேபாளத்துக்குத் திடீரென கொடுக்கு முளைத்தது எப்படி?
அந்த நாட்டு பிரதமர் ஷர்மா ஒளி இதுபோன்ற நடவடிக்கைகளை ஏன் எடுத்து வருகிறார் என்பது இந்தியர்கள் ஒவ்வொருவர் மனத்திலும் கேள்வியாய் எழுதுள்ளது.
நேபாள நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின், அரசு நடைபெற்று வருகிறது. இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாள நாட்டு வரைபடத்திற்கு கடந்த சனிக்கிழமை நேபாள நாட்டில் கீழவை ஒப்புதல் கொடுத்துள்ளது. மேலவையில் ஒப்புதல் பெறும் வாய்ப்பும் உள்ளது. பாக்கிஸ்தான், சீனாவின் நிலம் எங்களுக்கு வேண்டாம். அமைதிதான் வேண்டும் என்பது மத்திய அமைச்சர் கட்கரியின் பேச்சுக்கு சீனா மதிப்பளித்திருக்கிறது போலும்.
இந்தியாவுக்கும் நேபாளம் நாட்டிற்கும், கலாச்சாரம், அரசியல், வணிகம் உள்ளிட்டவற்றில் 70 ஆண்டுகளுக்கும் மேலான இறுக்கமான நட்பு இருக்கிறது. அதை மறந்துவிட்டு இவ்வாறு ஒரு வரைபடத்துக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதன் மூலம், இந்தியாவுடன் இனியும் நட்பை பராமரிக்கத் தேவையில்லை என்ற ஓர் எச்சரிக்கை அங்கிருந்து உலக நாடுகளுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாக் இந்தியா கருதுகிறது!
நேபாள நாட்டுக்கான இந்தியத் தூதராக பணியாற்றிய ராகேஷ் சூட், இதுபற்றி கூறுகையில், இந்தியா, நேபாளம் ஆகிய இருநாடுகளும் பரஸ்பர நட்பு மோசமான நிலைக்கு வர அனுமதிக்கப்பட்டுவிட்டது. இந்தியா இந்த விஷயத்தில் மெத்தனமாக இருந்திருக்கக்கூடாது.
கடந்த நவம்பர் மாதம் முதலே பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்குமாறு நேபாளம் கேட்டுக் கொண்டது. இந்தியா, இதற்கான நேரத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டு விட்டது இந்தியா. இப்போது நேபாளம் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போய்விட்டது. அதிலிருந்து அந்நாடு வெளியே வருவதற்கு காலம்தான் அனுமதிக்க வேண்டும்.
சீன நாட்டுடன் இந்தியாவுக்கு எல்லைத் தகராறு உள்ளது. இரு நாட்டு ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் பாக்கிஸ்தானுடனும் எல்லை பிரச்சினை இருக்கிறது. இருநாட்டு ராணுவ வீரர்களும் எதிரெதிரே நின்று யுத்தம் செய்கின்றனர். எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியில் பாக்கிஸ்தான் அத்துமீறிய தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றது. இது போன்ற நிலையில் நேபாளம் போன்ற ஒரு நாட்டிடம் எல்லைப் பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்வது சரியாந்தல்ல என்கின்றனர்.
மோதல் ஏற்பட்டிருக்க கூடாது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும், அதற்குப் பிறகு, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கூட, நேபாளத்துடன், இந்தியாவுக்கு திறந்த வெளி உறவு இருக்கிறது. நமது எல்லைகள் எப்போதும் திறந்து உள்ளன. இருநாட்டு மக்களும் தடையின்றி சென்று வந்தனர். இப்படியான ஒரு நாட்டுடன் மோதல் உருவாகியிருக்கக் கூடாது.
மோதலை தவிர்க்க சமரசப்பேச்சே மருந்து இன்னும் பேசலாம்.