மின்கட்டணக் கழிவு பேருதவியாகும்

மக்கள் குரலுக்கு மதிப்பளித்துவரும் மின்சார வாரியத்தின் சேவைக்கு பரவலான மக்கள் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

மாதம் 300 கிலோவாட்டிற்கும் குறைவாக மின் பயனீட்டுக்கு, ஏப்ரல் தொடங்கி மூன்று மாதங்களுக்கு மின் கட்டணம் இலவசம் என்பது சாதாரண மக்களுக்குப் பயனாகவும் குடும்பச் செலவினத்திற்கு நிவாரணமாகவும் அமைந்திருப்பதை எரிசக்தி இயற்கை வளத்துறை அமைச்சர் சம்சுல் அனுவார் நசாரா தெரிவித்திருகிறார்.

நாட்டிற்கு ஏற்பட்ட துயரம் நாமாக விரும்பி அமைத்துக் கொண்டதில்லை. பிற நாடுகளிலிருந்து வருகை புரிந்தவர்களிடம் இருந்து தொற்றிக்கொண்டவை. இதற்கு யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது. ஆனாலும், அதை மிகுந்த நம்பிக்கையோடு சமாளித்திருக்கும், சுகாதாரத்துறை, முன்னிலைப் பணியாளர்களின் சேவை பாராட்டுக்கிரியதாக இருக்கிறது. மக்களின் துயரத்திற்கு ஆறுதலாக மின்சாரக்கழிவு பேருதவியாக இருக்கிறது என்று மின்சாரப் பயனீட்டாளர்கள் கூறுகின்றனர்.

மாதத்திற்கு 77 வெள்ளி கழிவு அல்லது 10 விழுக்காடு  என்பதில் 40 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

வரும் ஜூலை மாத மின்கட்டண பில்லில் இதன் கழிவுகள் கணக்கிடப்பட்டிருக்கும் என்றும் அமைச்சர் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here