செந்தூலில் 3 ஆடவர்களின் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய சந்தேக நபர்கள் இன்னும் நாட்டிற்குள் இருக்கின்றனர்

கோலாலம்பூர் ஜாலான் பெர்ஹிந்தியான் கம்போங் கோவில் ஹிலிரில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) இரவு மூன்று இலங்கை ஆடவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் இன்னும் நாட்டில் உள்ளனர். கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் கூறுகையில் தேடுதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திங்கள்கிழமை (செப்டம்பர் 25) நகர காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்ற இருவர் விசாரணைக்கு உதவ இன்னும் விளக்கமறியலில் உள்ளனர் என்று கூறினார். பிரதான சந்தேகநபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதால், மூவர் கொலைக்கான காரணத்தை தாங்கள்  கண்டறியவில்லை என்று அவர் கூறினார்.

இலங்கையில் நடந்த மோதல்களுடன் இந்தக் கொலைகள் தொடர்புபட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார். 999 என்ற எண்ணுக்கு வந்த சண்டை தொடர்பான அழைப்பிற்கு பதிலளித்த போலீசார், ஒரு கடைவீதியில் இறந்து கிடந்த மூன்று ஆடவர்களின் உடலை கண்டுபிடித்தபோது விஷயம் விஸ்வரூபமானது.

இந்தச் சண்டையில் தொடர்புடைய இரண்டு இலங்கையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் பொலிசார் வருவதற்குள் தப்பிச் சென்றுவிட்டனர். அந்த வீட்டில் ஒரு திருமணமான ஜோடி இருந்தனர். நாங்கள் வளாகத்தில் சோதனை செய்தபோது, ​​ஒரு அறையில் மூன்று பேர் இறந்து கிடந்ததைக் கண்டோம். ஒரு உடல் நிர்வாணமாக இருந்தது.

அவர்களின் தலைகள் பிளாஸ்டிக்கால் மூடப்பட்டிருந்தன என்று அலாவுதீன் மேலும் கூறினார். கொலையுண்ட ஒருவரின் பெற்றோரான இலங்கை தம்பதி விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here