இங்குள்ள ஜாலான் கோத்தா டாமான்சாரா சாலையில் முன் சென்றுக் கொண்டிருந்த வாகனமோட்டியை தொடர்ந்துச் சென்று அவரின் காரை மடக்கி திட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
என்ன காரணம் என்று தெரியாமல் திடிரென தமது காரின் முன் அடையாளம் தெரியாத ஒரு நபர் அவரின் காரை நிறுத்தி விட்டு கோபத்துடன் தம்மை திட்டியவாறு காரின் கதவை திறக்க முயற்சித்துள்ளார். ஆனால் காரின் கதவை திறக்காமல் காவல் நிலையத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்ட வாகனமோட்டி போலீஸ் புகார் செய்துள்ளார்.
இச்சம்பவத்திற்கான நோக்கம் சாலை பகடியா அல்லது தாக்குதல் முயற்சியா என்று இன்னும் அறியப்படாத நிலையில் சாலை குற்றமான போக்குவரத்து பிரிவின் கீழ் தான் விசாரணை நடத்தப்படும் என்று பெட்டாலிங் ஜெயா ஓசிபி நிக் எஸானி முகமட் பைசல் கூறினார்.