அவர்கள் (பக்காத்தான் ஹராப்பான்) மோதிக் கொள்ளட்டும். நாம் நம்முடைய வேலையப் பார்ப்போம் என்று வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஸூரைடா கமாருடின் கூறினார்.
கெஅடிலான் கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியேறிய அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான ஸூரைடா கமாருடின் தற்போது பெரிக்காத்தா நேஷனல் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்கிறார்.
பிரதமர் வேட்பாளர் பதவிக்கு துன் டாக்டர் மகாதீரை ஆதரிக்கிறோம் என்று ஜசெகவும் அமானாவும் வெளிப்படையாக அறிவித்தன. ஆனால் இந்த பரிந்துரையை ஏற்க மறுத்த கெஅடிலான் கட்சி தற்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்ப்பில் டத்தோஸ்ரீ அன்வாரை பிரதமராக அறிவித்துள்ளது.
இதனால் ஜசெக, அமானா, துன் மகாதீர், வாரிசான், கெஅடிலான் கட்சிகள் இடையே உட்பூசல் வெடித்துள்ளது.
இதுபற்றி கருத்துரைத்த அமைச்சர் ஸூரைடா, அவர்கள் மோதிக் கொள்ளட்டும் என்றார். அவர்கள் விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை. பிரதமருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கும் என் ஆதரவு தொடர்கிறது என்று அவர் கூறினார்.




















