மீட்சியுறும் நடமாட்டக் காட்டுப்பாட்டை ஆணை தற்போது அமலில் இருக்கும் வேளையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. இதன் தொடர்பில் புதன் கிழமை அறிவிப்பு செய்யப்படும் என்று தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் கூறினார்.
நாளை நடைபெறவிருக்கும் அமைச்சர்களின் சிறப்பு கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து பேசப்படும்.
மேலும், திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடந்த 4 மாதங்களாக வருமானம் இன்றி தத்தளித்து வருவதாக கூறியுள்ளனர். இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்த பேச்சு இன்று நடைபெற்றாலும் முழுமையான தகவல்கள் நாளைய கூட்டத்தில் கலந்து பேசிய பின்னரே முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் எஸ்ஓபி எனப்படும் நிர்வாக நடைமுறை விதிகள் என்னவென்பதையும் கூட்டங்களில் 250 பேர் அல்லது இன்னும் அதிகமானோர் கலந்து கொள்ளலாமா எனவும் விவாதிக்கப்படும்.