பாலைவன வெட்டுக்கிளிகளா? மக்கள் பீதியில் உள்ளனர்

திருவொற்றியூர், ஜோதி நகர், எட்டாவது தெரு – மணலி விரைவு சாலை சந்திப்பில், எருக்கஞ்செடிகள் அதிகம் உள்ளன. இரு தினங்களாக, இந்த செடிகளில், பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த, வெட்டுக்கிளிகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது.

இவை, ஒரு செடியில் முகாமிட்டால், மொத்த இலைகளையும் கத்தரித்து, காலி செய்து விடுகின்றன. இதனால், பல செடிகள் இலை ஏதுமின்றி, வெறும் கிளைகள் மட்டும் குச்சிகளாக காட்சி அளிக்கின்றது.

வடமாநிலங்களில், பாலைவன வெட்டுக்கிளிகள் அச்சுறுத்தல் இருப்பதால், இந்த வகை வெட்டுக்கிளிகளை பார்த்து, அப்பகுதி மக்கள் மிரண்டு போயுள்ளனர்.

மேலும், வீட்டு தோட்டங்களில் புகுந்து, பூக்கள், மா, கொய்யா போன்ற செடிகளையும், வெட்டுக் கிளிகள் பதம் பார்க்குமா என, அஞ்சுகின்றனர்.தகவலறிந்து, அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், செடிகளில் கிருமி நாசினி தெளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here