நாட்டின் ஒற்றுமைக்கான அடையாளம் பவித்ரா

இந்தியர்களின் பாரம்பரிய சமயல்கலைகளை செய்து யுடியூப்பில் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்திருக்கும் சுகு பவித்ரா தம்பதியர் நாட்டின் ஒற்றுமைக்கான அடையாளமாக திகழ்கின்றனர்.

சமயல் கலையில் மட்டும் பவித்ரா கைத்தேர்ந்தவர் அல்ல மாறாக  பிரபல சஞ்சிகையின் அட்டை பக்கத்திற்கு வெளிவரும் மாடல் அழகியாக அவர் உருமாறியிருக்கிறார்.

மாடல் அழகியாக அவரை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது. ஆயிரங்கணக்கானோர் அவரின் புகைப்படங்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கறுப்பு நிற ஆடை அணிந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்திற்கு இன்ஸ்டாகிராமில் 21 ஆயிரம் பேர் லைம் போட்டுள்ளனர்.

தமது கணவர் எம்.சுகுவுடன் சுங்கை சிப்புட்டில் உள்ள ஒரு எஸ்டேட்டில் வாழும் அவர் மாடல் அழகியாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டதை மக்கள் வெகுவாக பாராட்டினர். குறிப்பாக இரு பிள்ளைகளுக்கு தாயான அவரை பெண்கள் அதிகம் பாராட்டி வருகின்றனர்.

பெபாத்தோங் எனப்படும் பிரபல சஞ்சிகையின் நடத்துனர் கூறுகையில், நாட்டின் ஒற்றுமை அடையாளமாக திகழும் பவித்ராவின் புகைப்படத்தை அட்டை பக்கத்தில் போட விரும்பினோம். பவித்ராவிற்கு இத்துறை மிக புதிதாக இருந்தது. இருந்தாலும் எங்களின் தேவைக்கு ஏற்ப அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here