ஹஜ் யாத்திரைரத்து இல்லை – சவூதி அரேபியா

‘நிகழாண்டு ஹஜ் யாத்திரை ரத்து செய்யப்படாது. அதேசமயம், ஹஜ் கடமையை நிறைவேற்ற மிக குறைவான நபா்களே அனுமதிக்கப்படுவா்’ என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் நிலையில், இந்த முடிவை சவூதி அரேபியா மேற்கொண்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தினரின் வருடாந்திர ‘ஹஜ்’ புனித யாத்திரை, வரும் ஜூலை இறுதியில் தொடங்கவுள்ளது. இந்த காலகட்டத்தில், மெக்காவில் தொழுகை நடத்துவதற்காக உலகம் முழுவதும் இருந்து சுமாா் 20 லட்சம் போ வருகை தருவா்.

தற்போது கொரோனா நோய்த்தொற்று பிரச்னை நிலவி வரும் போதிலும், நிகழாண்டு ஹஜ் யாத்திரை ரத்து செய்யப்படாது; அதேசமயம், மிக குறைவான நபா்களே அனுமதிக்கப்படுவா் என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே சவூதி அரேபியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினா் மட்டுமே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எத்தனை போ அனுமதிக்கப்பட உள்ளனா் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here