உயர்கிறது மனநல எண்ணிக்கை

கோவிட் -19 பலரை நோய்வாய்ப்படுத்தியுள்ளது, மேலும் அவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, குறிப்பாக மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள அன்புக்குரியவர்கள்.

குடும்பம் பெண்கள் விவகார இலாகாவின் தலைவரான பினாங்கு மாநில நிர்வாக அலோசகரான சோங் எங், உளவியாளர்களுக்கான உதவித்தொடர்பில்  ஒரு நாளைக்கு 10 முதல் 15 அழைப்புகளைப் பெற்று வருகின்றன. மக்கள் கூடல் இயக்க கட்டுப்பாட்டு உத்தரவு (எம்.சி.ஓ) விதிக்கப்பட்ட 90 நாட்களுக்குப் பிறகு இந்த அழைப்புகள் கிடைத்துவருவதாக அவர் கூறுகிறார்.

அழைப்புகள் பெரும்பாலும் குடும்ப சண்டைகள், சிறிய பிரச்சினைகள் முதல் வீட்டு வன்முறை போன்ற தீவிரமானவை வரை இருக்கின்றன.

சுமார் 32 மில்லியன் மக்களில் குறைந்தது 30 விழுக்காடுவரை மனநல பிரச்சினைகள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று சோங் மதிப்பிடுகிறார்.

கடந்த மாதத்திலிருந்து பினாங்கு மாநிலத்தில் புதிய வழக்குகள் ஏதும் இல்லை. என்றாலும், மன அழுத்தம் என்பது குறையாமலேயே இருக்கிறது.

மக்கள் பொதுவாக பல சிக்கல்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள், எனவே மன உறுதியை மீண்டும் பெற அவர்களுக்கு உதவ அதிக வளங்களை ஒதுக்க வேண்டும்  என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மனநல சவால்களை எதிர்கொள்ளும் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவ கூடுதல் தொடர்புகள்  திறக்கப்படலாம் என்றும், கூடுதல் உளவியாளர்கள் ஈடுபடுத்தப்படலாம் என்றும் சோங் கூறினார்.

நிலைமையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த பழைய ரக வீடுகள் கூட இப்போது மனநல பிரச்சினைகளுக்கான பராமரிப்பு மையங்களாக மாறி வருகின்றன.

ஒரு பழைய ரக வீடுகள்  என்பது முதியோருக்கானது,  ஆனால், மனநல பிரச்சினைகள் உள்ளவர்கள், மூத்த குடிமக்களுடன் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை  என்றும் அவர் கூறினார்.

ஒரே கூரையின் தங்கவைப்பது இரு வகையினரின் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும் என்று சோங் கவலை தெரிவித்தார், ஆனால், இப்போதைக்கு இதைத்தவிர  வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார அவர்.

சர்வதேச மருத்துவ மனநல மருத்துவர் சிந்தியா சூரின் கூறுகையில், தம்பதியினரிடையே பொருந்தாத தன்மை, விவாகரத்துக்கு வழிவகுக்கிறது என்கிறார்.

அவர்களில் சிலர்  மக்கள் கூடல் இயக்க ஆணையின்போது எப்போதும் ஒன்றாக இருப்பதை சமாளிக்க முடியவில்லை என்ற பதிவிகள் அதிகம் என்கிறார்.

கூடுதலாக, அவர்கள் வேலை இழப்பு, சமூக-பொருளாதார பிரச்சினைகள், சுகாதாரப் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறார்கள். துஷ்பிரயோக வழக்குகளும் பதிவாகியுள்ளன என்று அவர் கூறுகிறார்.

உளவியல் , ஆலோசனை சேவைகளுக்காக கடந்த ஆண்டு 1,929 பேர் சமூக நலத்துறைக்கு வருகை தந்திருக்கின்றனர். குடும்பம் சமூக மேம்பாட்டு முன்னாள் துணை அமைச்சர் ஹன்னா யோ கூறினார்.

671 வழக்குகள் இருந்த முந்தைய ஆண்டை விட இது 300 விழுக்காடு  அதிகரித்திருக்கிறது.

சுமார் 4.2 மில்லியன் மலேசியர்கள் மன இறுக்கச்  சவால்களுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here