நாட்டில் இதுவரை நடந்த பொதுத்தேர்தல்களில் வலிக்காமல் சுகப்பிரசவம் காண்பதுபோல் சினி இடைத்தேர்தலில் பாரிசான் வெற்றிபெற்றுவிடும் என்கிறார்கள். இந்த வெற்றி நிச்சயம் சுகப்பிரசவம், தாயும் சேயும் நலம் என்பதாகத்தான் இருக்கும்.
பாரிசான் வேட்பாளர் முஹமட் ஷாரிம் முஹ்மட் ஸெய்ன் வெற்றியை உறுதி செய்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாட்டின் அரசிய குழப்பத்தில் பரிசான் வேட்பாளர் சினி குளத்தில் வலையை விரித்திருக்கிறார். நிச்சயம் பெரிய மீன் கிடைக்கும். அப்படிக் கிடைத்தால் நடப்பு அரசாங்கத்தில் எந்த பாதிப்பும் நிகழ்ந்துவிடாது. டான்ஶ்ரீ முகிதீன் அதை வரவேற்பவராகவே இருப்பார்.
இதில், வார்த்தைக் குளறுபடிகளுக்கும் பஞ்சமில்லை. பாரிசானுடன் பாஸ் இணையாது என்றும் கூறுகிறார்கள். சினி இடைத்தேர்தலில் மட்டும் பாரிசான் வெற்றிக்கு பாடுபடுவோம் என்கிறார்கள். ஆடு பகை குட்டி உறவா/ என்பதுபோல் இருக்கிறது.
ஜூலை 4 ஆம்நாள் இடைதேர்தலில் மேலும் இருவர் போட்டியிட மும்முனையாக்கியிருக்கின்றனர். பாரிசான் தவிர்த்து மற்ற இருவருக்கும் வெற்றி வாய்ப்பில்லை. ஆனாலும் வேட்பாளர்களாக நிற்க என்ன காரணம்?
ஒன்று, வேட்பாளர்களாக அரசு பதிவேட்டில் இடம் கிடைத்துவிடும். தோற்பது நிச்சயம் என்றாலும் சின்னசின்ன மீன்கள் கிடைக்கும்.
இவர்கள் போட்டியாளர்களாக் நிற்கிறார்களா? நிற்கச்சொல்கிறார்களா? பாரிசான் மிகச்சுலபமாக வெற்றிபெறும் என்றாலும் பெரு பிரயத்தனத்தால் வென்றதாக இருக்க வேண்டும் என்று இருவரையும் எதிர்க்கச் சொல்லியிருக்கிறார்களா?
1400 பாஸ் உறுப்பினர்கள் களம் இறங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போகிறார்ளாம்.
வியர்வை சிந்தாமல் வெற்றியடையும் பாரிசானுக்கும் பாஸ் கட்சிக்கும் சினி இடைத்தேர்தலில் நட்பு ஒப்பந்தம் ஒத்துப்போகுமா?
எல்லா இடத்தேர்தல்களும் பாரிசானுக்கு என்றாகிவிட்டதில் பாரிசான் மரத்தில் பச்சை இலைகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன.