கோலாலம்பூர்:
சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (Sumbangan Asas Rahmah – SARA) உதவி திட்டத்தின் கீழ், இரண்டு நாள்களில் 1.7 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் , நாடு முழுவதும் RM110 மில்லியன் மதிப்புள்ள கொள்முதல்களைச் செய்துள்ளனர்.
இதனிடையே, நிதி அமைச்சு (MOF) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று இரவு 9.30 மணி வரியிலான நிலவரப்படி, 900,000-க்கும் அதிகமான பயனீட்டாளர்கள் நாடு முழுவதும், RM60 மில்லியன் ரிங் இட் உதவித் தொகையை செலவழித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, நேற்று அதிகாலைப் பரிவர்த்தனைகள் அதிகரித்ததால், மைகாசெ (MyKasih) அமைப்பின் திறன் அதிகரிக்கப்பட்டது.
இதனால், இரண்டாம் நாளில், 20% கூடுதல் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த முடிந்தது. இருப்பினும், மதியம் 1 மணி முதல் 2.30 மணி வரை, சில நகர்ப்புறக் கடைகளில், கூட்டம் அலைமோதியது.
நிலைமையைக் கட்டுப்படுத்த, மைக்காசெ ஊழியர்கள், பேரங்காடிகளில் நியமிக்கப்பட்டு, உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மேலும், காலை நேரங்களில், மக்கள் கடைகளுக்கு சென்றால், கூட்டத்தைக் குறைத்து, சுலபமான பரிவர்த்தனைகளை உறுதி செய்யலாம் என்று நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மை கார்டு அடையாள அட்டையில், ஒரு முறை வழங்கப்படும் RM100 ரிங்கிட் பணம், டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும். இந்தத் தொகையை, நாடு முழுவதும் உள்ள 7,300 பதிவு செய்யப்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் பயன்படுத்தலாம்.
























