ருக்குன் நெகாரா

ருக்குன் நெகாரா கோட்பாடு இன்று கேட்பாரற்றுப் போய்விட்டதோ? இப்படித்தான் யோசிக்க வைக்கிறது.

ருக்குன் நேகாரா அல்லது தேசிய கோட்பாடான ஐந்து நெறிகளை அறிந்து வைத்திருந்தவர்கள் சட்டத்திற்கு மதிப்பளிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் நாட்டின் தேசிய சட்டத்திற்கு மதிப்பளித்துவருவதை நிச்சயம் காணமுடியும்.

ருக்குன் நெகாரா கொள்கைகளை மறக்காமல் இருப்பவர்கள் தவறு செய்யத்துணியாதவர்கள். சமூக ஊடகத்த தவற்றுக்குத் துணை போகாதவர்களாக இருந்தார்கள் . இதனால் சைபர் குற்றங்கள் அதிகம் தெரியாமல் இருந்தது.

முதல் கோட்பாடே ,  இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் வைத்தல் என்று தொடங்குகிறது. ஒரு பானை சோற்றுக்குப் ஒரு சோறு பதம் என்பார்கள் அதுபோல, இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்பது என்ற கோட்பாட்டைக் கடைப்பிடிப்பவர்கள் தவறு செய்யத்துணியாதவர்கள். தவறு செய்யத்துணியாதவர்கள் எப்போதும் தீங்குபற்றியும் நினைக்க மாட்டார்கள். தீங்கு நினைக்காதவர்களாக மக்கள் வாழ்ந்த வரலாறும் இருக்கிறது. அப்போது சுதந்திர எண்ணமும் ஒற்றுமையும் மேலோங்கி இருந்தன. இன்று ருக்குன் நெகாரா பொருட்காட்டியக சேமிப்பாக மட்டுமே இருக்கிறது.

இறைவன் மீது நமபிக்கையுள்ளவர்கள் அரசரையும் மதிப்பார்கள், நாட்டின் சட்டத்தை மதிப்பார்கள், நேர்மறை சிந்தனை இருக்காது,

இன்றைய தலைமுறை ருக்குன் நெகாரா எனும் தேசிய கோட்பாடு என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள். தெரியாததால் நாட்டின் கோட்பாடு எதை உணர்த்துகிறது என்பதே அறியாமல்  வழிமாறிப்போகின்றவர்களாக மாறிவிடுகின்றனர். நல்லவை எப்போதும் போதனையாக் இருக்க வேண்டும். அதில் நமக்கு குறைகள் இருக்கின்றன்போல் தெரிகிறது. இது, எதிர்கால அர்ரொக்கியத்திற்கு நன்மை தராது.

இக்கோட்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் போதிக்கப்படவேண்டும் என்ற குரல் எழும்பியிருக்கிறது.

ருக்குன் நெகாரா என்று தொடங்கி அது மறக்கப்பட்டால் அதுசரியான வழிமுறையாக இருக்காது. எந்த நேரத்திலும் தோன்றும் இறைச்சிந்தனைபோல் அது இருக்கவேண்டும் என்ற அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை  துணை தகவல் தொடர்பு  பல்லூடகத்துறை அமைச்சர் டத்தோ ஜாஹிடி ஜைனுல் ஆபிடின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here