இருக்க இடம் கொடுத்தால்…

இருக்க இடம் கொடுத்தால் படுக்க பஞ்சு மெத்தை கேட்பார்கள் என்று ஒரு பழமொழி இருக்கிறது. அந்நியத்தொழிலாளர்கள் அப்படித்தான் நடந்து கொள்கிறார்களாம்.

கொரோனா காலத்தில் அவர்களின் பங்கு கவலையளிப்பதாகத்தான் இருந்தது. அவர்களின் தொற்று பாதிப்பில் அரசாங்கம் மிகுந்த மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டது. எவ்வித பத்திரங்களும் இல்லாதவர்களுக்கும் முதலுதவியாக மருத்துவம் வழங்கப்பட்டடிருக்கிறது. ஆனாலும், எவ்வித பத்திரங்களும் இல்லாமல் நாட்டின் இருக்கும் அவர்களை இங்கேயே தொடர்ந்து தங்கவைப்பதும் அவர்களுக்கு வேலைகொடுப்பதும் முறையான செயலாக இருக்காது.

அவர்களுக்கு இடமளித்து வேலை கொடுத்தால் பல சமூகப்பிரச்சினைகள் எழ வாய்ப்புண்டு. மனிதாபிமான முறையில் அவர்களுக்கு வேலை வழங்க முன் வரலாம் என்று பல குரல்கள் கேட்கின்றன.

மலேசியர்கள் ஏற்காத வேலைகளுக்கு அந்நியர்களைப் பயன்படுத்தலாம் என்று அக்குரல்கள் ஆலோசனை கூறியிருக்கின்றன. நல்ல யோசனைதான். ஆனாலும் அந்நியர்கள் எந்த பத்திரங்களையும் கொண்டிராமல் இருந்தால் அவர்களுக்கு வேலைதருவது முறையானதாக இருக்கமுடியாது.

போதிய பாத்திரங்கள் வைத்திருப்போருக்கு உதவலாம். ஆனால், கொஞ்சம் கூட யோசிக்காமல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கூடுதல் சம்பளம்கேட்பது என்ன நியாயம் ?

வேலை கிடைத்தாலே அதிர்ஷடம் என்று கூறப்படும்போது, கூடுதல சம்பளம் கேட்பது ஆரோக்கியமான செயல். அல்ல. கூடுதல் சம்பளம் என்றால் மலேசியர்களே அத்தொழிலை ஏற்பார்களே!

அந்நியர்களின் வருமானம் 2,000 வெள்ளியாகவும் இருக்கிறது. அடையாளமற்றவர்கள் ஒருநாளைக்கு 45, 50 வெள்ளியென சம்பாதித்தார்கள். மலேசியர்களின் நிலமை 1,200 வெள்ளியென்றிருக்கிறது.

முறையான சம்பளம் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. கூடுதாலாக வேண்டும் என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. கூடிய மட்டும் மலேசியர்களைத் தயார் செய்வதே சரியான வழியாக இருக்கும்.

மலேசியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒண்டவந்தவர்கள் ஊர்ப்பிடாரியை மேய்க்கக்கூடாது. முதலாளிகளும் துனைபோகக்கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here