கைவிடப்படும் வளர்ப்புப் பிராணிகளின் எண்ணிக்கை கவலை அளிக்கின்றன

கைவிடப்படும் வளர்ப்புப்பிராணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பலர் வளர்ப்புப்பிராணிகளை காப்பகத்தின் வாசலில் கைவிடும் நிலைக்கு ஆளாகிவிட்டனர்.

காரணம் சிறியதுதான். செல்லமான வளர்ப்புப் பிராணிகளுக்கான செலவினங்கள் அதிகரித்து வருவதும் ஒரு காரணமென்று கூறப்படுகிறது.

வளர்ப்புப் பிராணிகளின் காப்பக வாசலில் சில பிராணிகளைக் கைவிட்டுச்செல்கின்றனர். காப்பகத்தின் வாசலில் ஆறுமுதல் ஏழு உருப்படிகளைக் காணமுடிகிறது என்று காப்பக உரிமையாளர் கூறுகிறார்.

தொற்றின் காலத்தில் கைவிடப்பட்ட வளர்ப்புப் பிராணிகளைக் காப்பாற்றுவதில் நிறைய சிரமங்களை எதிர் நோக்கியாதாகவும் மாதம்தோறும் 12 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வெள்ளி வரை செலவு செய்ய வேண்டியிருப்பதையும் கூறுகிறார். அவர். காய்கறி தோட்ட வருமானத்தின் ஒருபகுதியை பிராணிகளின் வைத்திய செலவுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வளர்ப்புப்பிராணிகளை வெறுமனே கைவிட்டுவிடவும் முடியாது. அதற்கான பாதுகாப்பை நிச்சயம் வழங்கித்தான் ஆகவேண்டும்.

சிலர், பொறுப்பின்றி வீசி எறிகின்றனர். நாளுக்குநாள் கூடிவரும் வளர்ப்புப் பிராணிகளைக் கவனிக்கும் பணியாளர்களுக்கும் சம்பளம் தரவேண்டும். இச்செலவுகளை ஈடுகட்ட சிரமத்தை எதிர்நோக்குவதாக காப்பகம் கூறுகிறது.

சிலர் தெருவில் விட்டுவிடுகின்றனர். இன்னும் சிலர் கோலாலம்பூர் வட்டாரத்தில் விட்டுவிடுகின்றர். சிலர் சிரமத்தை உணர்ந்து உதவுகின்றனர். 200 க்கும் கூடுதாலான வயதுமுதிர்ந்த நாய்களையும் காப்பகம் பாதுகாத்து வருகிறது.

வளர்ப்புப்பிராணிகளைக் கைவிடுவது குற்றச்செயலாகும் என்று சட்டம் கூறுகிறது. வளர்ப்புப்பிராணிகள் பாதுகாப்புச் சட்டடத்தில் தண்டனை வழங்க இடமளிக்கிறது. இதற்கு 20 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம்வரை வெள்ளி வரை தண்டிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.  மூன்று வருட சிறைவாசமும் அனுபவிக்க வேண்டிவரலாம்.

வளர்ப்புபிராணிகளை நேசிக்கின்றவர்கள் உதவியும் புரியலாம். தேர்வு செய்து உரிமையாக்கிகொள்ளவும் முடியும் என்று காப்பகங்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here