சஹாராவில் தூசுப்படல மேகம்

சஹாரா தூசுப்படலம் கியூபாவின் பெரும்பகுதியை இருட்டடிப்புச்  செய்து, புளோரிடாவில் காற்றின் தரத்தை பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டிலேயே இருக்குமாறு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து அட்லாண்டிக் கடலில் தூசி மேகம் பரவியது, கரீபியன் தீவான புவேர்ட்டோ ரிக்கோவை உள்ளடக்கி  இத்தூசுப்படலம் அமெரிக்காவில் தெற்கு புளோரிடாவை தாக்கியது .

இந்நிலமை மேலும் மோசமடையும் என்று  இத்தீவை வழிநடத்தும்  நிபுணர்கள் தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தலைவரான பிரான்சிஸ்கோ டுரான், இத்தூசு மேகம் சுவாச ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று எச்சரித்திருக்கிறார்.

மியாமியில் காற்றின் தரம் தற்போது மிதமானதாக இருக்கிறது இந்நகர சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது, சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

பலத்த காற்றினால் இத்தூசு மேகம் மோசமடைந்து வருகிறது. சஹாராவிலிருந்து வரும் தூசுப்படலம் வசந்த காலத்தின்போது மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலில் பயணிக்கிறது.

ஆனால், கியூபாவின் தற்போதைய தூசி மேகத்தின் அடர்த்தி சாதாரண அளவை விட அதிகமாக உள்ளது  என்று கியூபா வானிலை ஆய்வாளர் ஜோஸ் ரூபீரா கூறியிருக்கிறார்.

ஹவானாவில், விஞ்ஞானி யூஜெனியோ மோஜெனா, காற்றின் தரத்தில் கணிசமான சரிவு  இருப்பதைத் தெரிவித்திருக்கிறார்.

தூசி மேகங்கள் மனித ஆரோக்கியத்திற்கு மிகுந்த கேடானது.  மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று மோஜெனா கூறினார்.

இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், சிலிக்கான், பாதரசம் போன்ற தாதுக்கள் தூசியில் இருக்கின்றன. மேலும் வைரஸ்கள், பாக்டீரியா, பூஞ்சை, நோய்க்கிருமிப் பூச்சிகள், ஸ்டேஃபிளோகோகி , கரிம மாசு  ஆகியவற்றைக் கொண்டு கொண்டிருப்பதையும் அவர்  கூறினார்.

கியூபாவின் கிழக்கு மாகாணமான குவாண்டனாமோவில் வெப்பநிலை புதன்கிழமை 37.4 டிகிரி செல்சியஸ் நிலையை எட்டியுள்ளது என்று வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை.

தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருப்பதாக அரசாங்கம் கூறியதுடன், கடந்த வாரம் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை தளர்த்தத் தொடங்கியது, ஹவானாவில் மட்டுமே கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே பகுதி, ஏனெனில் அது தொடர்ந்து தொற்றுநோய்களை பதிவு செய்துகொண்டிருக்கிறது.

இத்தீவில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,318 ஆக இருக்கிறது. கோவிட் -19 இல்  85 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here