மோதாதே! சொந்த மக்களே எச்சரிக்கை

சீனாவிற்கு எதிராக அந்த நாட்டைச் சேர்ந்த சொந்த மக்களே தற்போது கொதித்தெழுந்து வருகிறார்கள். இந்தியாவுடன் சீனாவின் மோதலை அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இந்தியாவிற்கு எதிராக சீனா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதிலும் எல்லையில் தொடர்ந்து சீனாவின் ராணுவம் அத்துமீறி வருகிறது.

கல்வான் பகுதியில் தற்போது பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிற்கு எதிராக சீனா போருக்கு தயார் ஆகி வருகிறது என்று கூட செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் சீனாவிற்கு எதிராக அந்த நாட்டைச் சேர்ந்த சொந்த மக்களே தற்போது கொதித்தெழுந்து இருக்கிறார்கள்.

மொத்தம் 5 விதமாக புகார்களை சீன மக்கள் முன்வைத்திருக்கின்றனர். சீனா மொழியில் வைக்கப்படும் இந்த புகார்கள் தற்போது மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இப்போது போர் வேண்டாம் அதில் முதலாவதாக இந்தியா உடன் போர் வேண்டாம் என்று சீனர்கள் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். இந்தியாவுடன் போருக்குச் சென்றால் பொருளாதார ரீதியாக பிரச்சினை ஏற்படும்.

நமக்கு இப்போதுதான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் ஹாங்காங், தைவான் பிரச்சினை வேறு இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா போன்ற வளர்ந்த நாடுடன் மோதினால் நமக்குத்தான் பிரச்சினை அதிகம் ஏற்படும் என்கிறார்கள்.

இந்தியா உலக நாடுகளுடன் நல்ல உறவை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவாக உள்ளது. அமெரிக்கா இந்தியாவுடன் மிக நெருக்கமாக உள்ளது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்தியாவை தீவிரமாக ஆதரிக்கின்றன. ஆனால், சீனாவிற்கு இப்படி ஆதரவு இல்லை. இதனால் சீனா தேவையில்லாமல் ஆபத்தை நண்பனாக்கிக் கொள்ளக்கூடாது என்கிறார்கள்.

இந்தியாவிற்கு ரஷ்யாவின் ஆதரவும் இருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து போர் ஆயுதங்களை இந்தியா வாங்கி வருகிறது . ரஷ்யாவும் இந்தியாவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமாக்கி சேர அழைக்கிறது. இதனால் ரஷ்யா, சீனாவை விட இந்தியாவிற்குதான் நெருக்கமாக இருக்கிறது என்பது உறுதியாகிறது. ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் சீனாவுடன் உறவை முறிக்கலாம். இதனால் சீனா அவசரப்பட கூடாது.

கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பல சீனா மீது கோபமாக இருக்கின்றன.. இப்படிப்பட்ட நிலையில் இந்தியா போன்ற அமைதியான நாட்டுடன் போருக்குச் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உலக அளவில் சீனா தனித்து விடப்படும் என்று அந்நாட்டு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here