குறைந்திருக்கிறது கோவிட்- 19, சுகாதாரத்துறைக்கு வெற்றி!

மலேசியாவில் கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் முயற்சிகள் யாவும் பலனளிக்கும் வகையில் முடிவுகளைக் காட்டியுள்ளன, மேலும் பொருளாதாரத் துறைகள் மீண்டும் செயல்பட வாய்ப்புகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இதனால் அரசாங்கத்தின் முன்னெடுப்பு செயல்திட்டங்களுக்கு ஆதரவு கூடியுள்ளன.

கேளிக்கை பொழுதுபோக்கு மையங்களில் தங்களைத் ஈடுபடுத்திக்கொள்ள கொள்ள விரும்புவோருக்கு இது ஒரு நல்ல செய்தியாகும், இப்போது ஜூலை 1 முதல் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுவதால் அனைத்து மனமகிழ் மையங்கள், உடம்புப்பிடி மையங்கள் செயல்படுவதற்கு பச்சை விளக்கு காட்டப்படிருக்கிறது.

மூத்த அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதனை  அறிவித்திருக்கிறார். தொடர்ந்து, இந்த தேதிகள் முதல் தரமான இயக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்குவதன் மூலம் இதுபோன்ற மையங்களை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசிய குடிமக்கள் மட்டுமே வளாகத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படவேண்டும். மேலும் மையங்கள் மீண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதிக்கப்படுவதற்கு முன் அவர்கள் கோவிட் -19  தொற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

கூடுதலாக, தஃபிஸ் பள்ளிகளுக்கும் பதிவுசெய்யப்பட்ட மதரஸாவிற்கும் மகிழ்ச்சியான செய்தியும் இருக்கிறது.  மற்ற பள்ளிகளைப் போலவே அதே தேதியில் மீண்டும் இவை திறக்க அனுமதிக்கப்படும், அந்த தேதியை கல்வி அமைச்சகம் மலேசியா (MOE) அறிவிக்கும்.

மீட்பு இயக்க கட்டுப்பாட்டு ஆணை (ஆர்.எம்.சி.ஓ) நேற்று தனது 17 ஆவது நாளை அடைந்திருக்கிறது என்று சுகாதாரத்துறைத் தலைமை  இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நாட்டின் கோவிட் -19 இன் மீட்பு விகிதம் 96.4 சதவீதமாக இருப்பது ஒரு நல்ல செய்தியாக இருக்கிறது என்றார். உளளபடியே இது நல்ல செய்திதான். கூடுதலாக, மலேசியாவில் கோவிட் -19 வழக்குகளின் இறப்பு விகிதம் உலகின் மிகக் குறைந்த எண்ணிக்கையில் 1.41 ஆக இருக்கிறது.

தொடர்ச்சியாக 12 நாட்களுக்கு  இறப்புகள் இல்லை, மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 8,606 என இருக்கிறது. மலேசியர்களிடையே உள்ளூர் பரவுதலில் தொடர்ச்சியாக தினமும் ஐந்துக்கும் குறைவானதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளில் அரசாங்கத்துடன் ஒத்துழைத்துவரும் அனைத்து மலேசியர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

எவ்வாறாயினும், கோவிட் -19 தொற்றுக்கு  எதிரான போர் வெகு தொலைவில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.  மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதே முக்கியம்.  நடைமுறை கட்டொழுங்குடன்  இணக்கமாக இருக்க வேண்டும். இதனால் ஜூலை மாதத்திற்குள்  கோவிட் -19  தொற்று எண்ணிகையை குறைக்கும் முயற்சி  இலக்கை அடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here