குடிபோதையில் வாகனம் ஓட்டிய நால்வர் கைது

பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீஸார் சாலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நால்வர் கைது செய்யப்பட்டதாக அம்மாவட்ட காவல் துறை தலைவர் எசிபி நிக் எஸானி பின் முகமட் பைசல் தெரிவித்தார்.

நேற்று இரவு 11 மணி தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 170 வாகனங்களை போலீஸார் சோதனை செய்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டிய 36 முதல் 48 வயதுடைய நால்வரை போலீஸார் கைது செய்தனர். மேலும் பல்வேறு குற்றங்களுக்காக 20 சம்மன்கள் வெளியிடப்பட்டன.

 

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் தொடர்ந்து சாலை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here