NRP யின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான தேதிகளை கல்வி அமைச்சகம் அறிவித்தது

கோலாலம்பூர்: பகாங் மற்றும் நெகிரி செம்பிலானில் கல்வி அமைச்சகத்தின் (MoE) கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் அக்டோபர் 4 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்று MoE தெரிவித்துள்ளது.

அதேபோல, ஜோகூரில் அக்டோபர் 10 ஆம் தேதி அன்று அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மீண்டும் தொடங்கும்.

கல்வி அமைச்சகம் இன்று வெளிட்ட ஒரு அறிக்கையில், இன்று (செப்.24) தொடங்கி தேசிய மீட்பு திட்டத்தின் (NRP) அடுத்த கட்டத்திற்கு செல்லும் மூன்று மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்கள் கட்டங்கட்டமாக திறப்பது தொடர்பில், செப்டம்பர் 22 அன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் அறிவிப்பிற்கு ஏற்றவாறு இம்முடிவு அமலுக்கு வருகின்றது.

அமைச்சின் கூற்றுப்படி, கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள், மாநிலங்களின் கட்டங்களின் (phase transition) மாற்ற தேதிக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, புதிய கட்டத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) அவை பின்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று 2 வது கட்டமாக மாற்றப்பட்ட ஜோகூருக்கு, MoE இன் கீழுள்ள கல்வி நிறுவனங்கள் அக்டோபர் 10 ஆம் தேதி கட்டம் 2 SOP இன் கீழ் மீண்டும் தொடங்கும்.

மேலும், இன்று 3 ஆம் கட்டமாக மாறியுள்ள மாநிலமான பகாங்கிற்கு, கல்வி நிறுவனங்கள் 2 ஆம் கட்டத்தின் கீழ் அக்டோபர் 4 ஆம் தேதி மீண்டும் தொடங்கும். இது அக்டோபர் 11 ஆம் தேதி அன்று 3 வது கட்டத்திற்கான SOP யை ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவித்தது.

இன்று 4 வது கட்டமாக மாறிய நெகிரி செம்பிலானுக்கும் இந்த முறையிலேயே, அம் மாநிலத்திலுள்ள கல்வி நிறுவனங்கள் அக்டோபர் 4 ஆம் தேதி கட்டம் 3 SOP இன் கீழ் அதன் செயல்பாடுகளைத் தொடங்கும், பின்னர் கட்டம் 4 SOP யானது அக்டோபர் 18 ஆம் தேதி முதல் அங்கு நடைமுறைக்கு வரும்.

நெகிரி செம்பிலான் NRP யின் 4 -வது கட்டமாகவும், பகாங் 3 -வது கட்டமாகவும், ஜோகூர் 2 -வது கட்டமாகவும் மாற்றும் என்று பிரதமர் முன்பு அறிவித்தார்.

அமைச்சின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் பள்ளிகள், தொழிற்கல்வி கல்லூரிகள், மெட்ரிகுலேஷன் மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இதனுள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here