கோலாலம்பூர் மொத்த சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் மூடப்படும்

துப்புரவு ,கிருமி நீக்கம் செய்யும் பணிகளுக்காக கோலாலம்பூர் மொத்த சந்தை இனி (பி.பி.கே.எல்) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும்  வளாகத்தில் அமைந்துள்ள ஈரச் சந்தைகள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மூடப்படும் என்று டி.பி.கே.எல் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிருமிநாசினி பணிகளால் ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு  மாநகர் மன்றம் எவ்வகையிலும்  பொறுப்பேற்காது என்று அவர் வெளியிட்ட மூடல் அறிவிப்பில்

மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.

சந்தைகளில் துப்புரவுப் பணிகள் கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்காக மாநகர மன்றம் மேற்கொண்டுள்ள ஒரு முயற்சியாகும்.

பத்து, தித்திவங்சா, சிகாம்பட், வாங்சா மாஜு, செத்தியா வாங்சா ,  கெப்போங் ஆகிய 16 தொகுதிகளில் இத்துப்புரவு, கிருமி நீக்கம் செய்யும் பணிகள் நடத்தபடும் என்பதால் இப்பகுதிகளில் வியாபாரம் செய்யும் வணிகர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று மேயர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here