பறிபோகிறதா நமது அடையாளங்கள்!

நாட்டில் நமது அடையாளங்கள் பறிபோகும் அபாயத்தில் இருக்கின்றன. இது போன்று சொல்லத் தொடங்கி, குரல் எழுப்பி அரை நூற்றாண்டைக் கடந்துவிட்டன. இன்னும் எந்த அசைவுகளும் இல்லாமல், சுய நினைவிழந்து கிடந்தால், அழிவுப்பாதை வெகு தொலைவில் இல்லை என்பதுதான் முடிவாக இருக்கும்.

நம்மின் அடையாளங்களும் தீய சக்திகளால் மதம்மாறிக்கொண்டிருக்கின்றன என்பது இன்னும் பலருக்குப் புரியவே இல்லை. அடையாளம் என்பது என்ன?

இந்தியர்களுக்கான அடையாளத்தை உறுதிப்படுத்தப்படவில்லையென்றால் வரலாறு மறந்துபோகும், மறைந்தும்போகும். 1980 களுக்குமுன் மற்றவர்களின் அடையாளங்கள் அதிகமில்லை.

இந்தியர்களின் மதிப்பைக் குறைக்க அன்றே திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதனால் நம் அடையாளங்கள் மறைமுகமாகவே அழிவை அடைந்தன. அப்போதெல்லாம் விழித்துக்கொள்ளாத மக்களாகவே இந்தியர்கள் இருந்து வந்தனர். ஆனால், பேசுவதில் மட்டும் மிஞ்ச ஆளில்லாமல் இருந்திருக்கின்றனர்.

அன்றைய நிலையில் நிதி அமைச்சராக இருந்த தெங்கு ரஸாலி பிரதமராகியிருக்க வேண்டும். அவர் அதை ஏற்கவில்லை. நிதித்துறை போதும் என்று இருந்துவிட்டார்.

அன்றிலிருந்தே நமது அடையாளங்கள் மாறத்தொடங்கிவிட்டன. அறிந்தவர்கள் அமைதியாக இருந்தனர். தெரிந்தவர்கள் காதில் விழாதவர்களாக் இருந்தனர்.

இப்போதும் அதே நிலைதான். கொரோனா வந்து இந்திய ரசத்தின் பெருமைய உணர்த்தியிருக்கிறது. அதைக்கூட தங்கள் பாரம்பரியம் என்கிறார்கள் என்றால் ரசம் எத்த்சகையது என்பது புரியவேண்டாமா? ஆனால், அது இந்தியர்களுக்கானது அல்லவாம். இன்னும் வரிசைப்பிடித்து நிற்கிறது ஆயிரக்கணக்கான் பொருள்கள். இது குறித்துப்பேசி ஆவணப்  படுத்தவில்லையென்றால் வரலாற்றில் அத்திப்பெட்டி கதையாகத்தான் இந்திய, தமிழர் பொருட்கள் இருக்கும். பொருட்காட்சியகத்த பலர் பார்க்கப்போவதில்லை. அங்கு என்ன நிலைமை என்றும் தெரியாமல் இருக்கிறோம். நம் அடையாளங்கள் சரியாக இருக்கின்றவா என்பதை கவனிப்பது யார்?

மூத்த சங்கங்கள் ஒன்றிணைந்து ஆவணப் படுத்த முன்வரலாம். அதைவிட தேசிய நிலநிதி கூட்டுறவுச்சங்கம் அறநிதி வாரியம் இதைச்செய்ய மணிகட்டலாம். குழு அமைத்துச்செயல்படலாம்.

இந்நாட்டில் வரலாற்றை இழந்த சமூகமாக மாறிவிடாமல் இருக்க, மொழிகாக்க. நம் அடையாளங்களை மீட்கும் வகையில் பொருட்களை ஆவணப்படுத்த முயலவேண்டாமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here