வீட்டு நில வரி 50 சதவீதமாக குறைக்க வேண்டும் மாநில அரசாங்கத்திற்கு கோரிக்கை

நில வரி கட்டணம் செலுத்துவதற்கு நோட்டிஸ் கிடைக்கப்பெற்ற 21 நாட்க்களுக்குள் அக்கட்டணத்தை முழுமையாக செலுத்துபவர்களுக்கு 25 சதவீதம் கழிவு வழங்கப்படும் என நெகிரி மாநில அரசாங்கம் அண்மையில் அறிவித்திருப்பது மாநில மக்களுக்கு ஓர் நற்செய்தி என மெட்ரிக்ஸ் கொன்சேப்ட் ஹோல்டிங்ஸ் மேம்பாட்டு நிறுவனத் தலைவர் டத்தோ லீ தியான் ஹோக் கூறினார்.

மாநில மக்கள் நலன் கருதி இதுவொரு விவேக முடிவு என வர்ணித்த அவர், மாநிலத்திலுள்ள குறைந்தவிலை, நடுத்தரம் மற்றும் அடுக்குமாடி வீடுகளுக்கான வரி மற்றும் நில வரி கட்டணம் 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என அவர் மாநில அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

இவ்வீடுகளில் பெரும்பாலும் பி40 மக்களே வாழ்கிறார்கள் என்றும், கோவிட்-19 பாதிப்பால், அம்மக்கள் எதிர்நோக்கும் நிதி சுமையை சமாளிக்க இதுவொரு சிறந்த வழியாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக இங்கு மாவார் தனியார் மருத்துவமனையில் மெட்ரிக்ஸ் கொன்சேப்ட் அறவாரியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் டத்தோ லோகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற ரத்ததான நிகழ்வை தொடக்கிவைத்த அவர், ரத்த பற்றக்குறையை எதிர்நோக்கும் அரசாங்க மருத்துவமனைக்கு உதவும் நோக்கத்தில், இத்திட்டம் தொடங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

– நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here