காஜாங் சுங்கை ஜெலோக் மக்களின் முகம் இப்போது வெளிச்சத்தில் மிதக்கிறது.
நீண்ட நாட்களாக மாற்றப்படாமல் இருந்த சாலை விளக்குகள் பல மாற்றப்பட்டிருக்கின்றன. மாற்றப்பட்டும் வருகின்றன. அதனால் இப்பகுதி சாலைகள் பல பிரகாசமடைந்திருக்கின்றன.
சில காலமாகவே இரவு நேரத்தில் சாலைகளில் நடக்க அச்சம் கொண்டிருந்த மக்கள் இப்போது வெளிச்சமான சாலைகளில் நடமாட்டதைக் கூட்டியிருக்கின்றனர்.
இதேபோன்று சிலாங்கூர், பகுதிகளிலும் பலசாலை விளக்குகளை மாற்றியிருக்கின்றர். மாற்றப்படுகின்றன.
மங்கிப்பொன வெளிச்சத்தில் பல குற்றச்செயல்கள் நடந்திருக்கின்றன. வெளிச்சமில்லாத சாலைகளில், வழிப்பறிகள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க தேசிய மின்சாரம் வாரியம் முனைந்திருப்பதை பாராட்டத்தான் வேண்டும்.
கோவிட் -19 காலத்தில் முடங்கிப்போன பல வேலைகளில் மின்சார வரியமும் செயல்பட முடியாமல் இருந்தது. புதிய மீட்சியில் இப்போது வெளிச்சத்தை வழங்கிவருகிறது. சலுகைகளையும் மக்களுக்குத் தந்துகொண்டிருக்கிறது.
இதனால், பல சாலைகளில் குற்றங்கள் குறைந்திருக்கின்றன. வெளிச்சம் கூடியிருக்கிறது.