ஒத்தி நிற்பதே உயர்வானது!

கடந்த 20 ஆண்டுகளில் 70 வகையான வைரஸ் கிருமிகள் மனுக்குலத்திற்கு மிரட்டலாக இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டித்தான் மனுக்குலம் பிழைத்திருக்கிறது. இதில் 2009 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒருவகை சளிக்காயச்சலால் பெரிய பாதிப்பில் மக்கள் சிக்கினர்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நாட்டைச்சீண்டிப்பார்க்கும்  பொருளாதார சிக்கல் போல் மனுக்குலத்திற்கும் சிக்கல் வந்துபோகிறது. இன்றைக்கும் அதே நிலைதான் என்கிறார் மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் டான்ஶ்ரீ லீ லாம் தாய்.

மனுக்குலம், இனி வெடிக்கும் ஆயுதங்களுக்கு அஞ்ச மாட்டார்கள். சுடும் ஆயுதங்கள் கூட மிரட்டலாக இருக்காது. கிருமித்தொற்றுக்கு மட்டுமே அஞ்சக்கூடியவர்களாக ஆகிவருகின்றனர்.

இன்றைய தொற்றுக்கும் தடுப்பூசி வந்துவிடும். அந்நாளின் அம்மை தடுப்பூசி போல பொதுவான தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயபடுத்தப்படும். தடுப்பூசி போட்டுகொள்ளாதவர்கள் பள்ளிக்கும் போக முடியாது, வேலையிலும் அமரமுடியாது என்ற காலமும் தொலைவிலில்லை.

மனிதர்கள் மனிதர்களுக்குசெய்யும் துரோகம் மன்னிக்கபடலாம். அல்லது தண்டிக்கப்படலாம். ஆனால், மனுக்குலத்திற்கு மனுக்குலமெ செய்யும் துரோகங்களில் மிக மோசமானது இத்தகைய கிருமிகளைப் பரவவிட்டு உயிர்களைக் கொல்வதுதான்.

இப்படிச் செய்வதற்கு சில நாடுகள் கம்பபெனிகளாகவே இயங்குகின்றன போலும் தெரிகின்றன. ரகசிய உடன்படிக்கை, பணம். மருந்து விற்பனை என்றெல்லாம் இதில் அடங்கியிருக்கின்றன என்ற சந்தேகம் பரவலாகவே வலுவாகவே உணரப்படுகின்றன.

பல ஏழை நாடுகள் பெரிதும் பாதிக்கப்ப்டுகின்றன என்றாலும் பணக்கார, வல்லரசு நாடுகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பது எதைக்காட்டுகிறது?

உண்மையான வல்லரசு யார் என்பதைக்காட்ட, பல வித துஷ்பிரயோகங்கள் என்று கூறாலாமா?

மலேசியம் திறைமையாக கட்டுப்பாடுகளைப் புகுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்தியிருக்கிறது. இதற்காக நூறு நாட்களைச் செலவுசெய்திருக்கிறது. கோடிக்கணக்கில் செலவழித்திருக்கிறது.

இதற்கு மக்களும் ஒத்துழைத்திருக்கிறார்கள். மக்கள் கூடல் இடவெளிதான் மிகச்சிறந்த மருந்து என்று கற்றுக்கொண்டிருக்கிறார்கள். கற்றுக்கொண்டதை நடைமுறைக்கும் கொண்டுவந்துவிட்டார்கள்.

புதிய மீட்சி நடைமுறை எஸ் ஓ பி  இதற்கான பாதையை வகுத்துக்கொடுத்திருக்கிறது. அதன் வழி செல்வதுதான் சிறந்த பாதுகாப்பு என்று உணரப்பட்டிருக்கிறது. புதிய வைரஸ் ஒன்று உருவாகும் போது, பாதுகப்புக்கு என்ன தேவை என்பது படிப்பினையாகிவிட்டது. அதற்கான் உபகரணங்கள் எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும். ஒத்தி நிற்பதே உயர்ந்தது ஆகிவிட்டது. எங்கு சென்றாலும் இடைவெளி ஒன்றுதான் முதன்மையான மருந்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here