கோவிட்-19 பாதிப்பால் கடந்த 3 மாதங்களாக வருமானத்தை இழந்ததால், தனது குடும்பம் தட்டு தடுமாறி தவித்து வந்தது என அப்துல் சமாட் சம்சூடின் (வயது 60) கூறுகிறார்.
இந்த நிதி நெருக்கடியிலிருந்தும், அன்றாட வாழ்வாதார போராட்டத்திலிருந்து மீண்டு வர பல போராட்டங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. மத்திய அரசாங்க வழங்கிய நிதி உதவியும், மாநில அரசாங்கம் வழங்கிய அத்தியாவசியப் பொருட்கள் உதவியும், நமது பிரச்சனைக்கு முழுமையாக தீர்வாக அமையவில்லை.
இந்நிலைமையில் தனது குடும்பத்தை கரை சேர்க்க பணம் வேண்டும். நம்பிக்கையோடு தனது சிறிய முதலீட்டுதான், கடந்த சில வாரங்களுக்கு முன்பு காரில் மளிகை கடை வியாபாரம் தொடங்கினேன் என்கிறார் சமாட்.
அந்த வியாபாரம் தனக்கு கைக்கொடுத்தது, பொருளாதார பிரச்சனையிலிருந்து தனது குடும்பத்தை மீட்க்க பெரும் உதவியாக இருந்தது. தனக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் தம்மை நாடி வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி் செல்கிறார்கள்.
இந்த வியாபாரம் சட்டவிரோதமானதுதான், என்ன செய்வது வயிற்று பசி என்று உள்ளது. வயிற்று பிழைப்புக்காக திருடுவது, ஏமாற்றி பணம் பறிப்பதை விட, இப்படி உழைத்து அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தலாம் என குறிப்பிட்டார்.
இங்கு சிரம்பான் நடுப் பட்டணத்தில் இத்தொழிலை செய்து வரும் வேளையில், அனுமதியின்றி பொது இடத்தில் கார் நிறுத்துமிடத்தில் காரில் வியாபாரம் செய்வது சட்டவிரோதமானது என கூறி சிரம்பான் மாநகர மன்றம் தமக்கு அபாரதம் விதித்தது.
இதனிடையே கடை திறந்து வியாபாரம் செய்வதற்கு தனக்கு வசதியில்ல சூழ்நிலையில், காரில் தொடர்ந்து மளிகை பொருட்கள் விற்கும் இந்த வியாபாரத்திற்கு அனுமதி கேட்டு சிரம்பான் மாநகர் தரப்பிடம் விண்ணப்பம் செய்துள்ளதாக சமாட் தெரிவித்தார்.