பாலர்ப்பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும் இன்னும் சில பெற்றோர்களின் பதில் இப்போது இல்லை என்பதாகத்தான் இருக்கிறது.
இப்போதைக்கு பாலர்ப்பள்ளி மிக முக்கியம் என்ற பட்டியலில் இல்லை. அரசாங்கமும் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் கூறியிருக்கிறது.
பல பெற்றோர்கள் விருப்பம் இல்லாவிட்டாலும் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குப்போக ஆசைப்படுவதாகவே கூறுகிறார்கள்.
பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் உடன்படாவிட்டாலும். பிள்ளைகளின் மனநலம் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் அனுப்பி வைக்க முன் வந்திருக்கிறார்கள். பல பிள்ளைகள் மன அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.
சில பிள்ளிகளை முகக்கவசம் அணிவித்து அனுப்பி வைக்கிறார்கள். இது நல்ல பழக்கமாக இருந்தாலும் முகக்கவசங்கள் பாதுகாப்பானதாகவும் இருக்கவேண்டுமே! பிள்ளைகள் முகக்கவசங்களை முறையாக கையாளமுடியுமா, அல்லது பாதுகாக்க முடியுமா?
ஆசிரியர்களும் கவனமாக இருக்க வேண்டியாதாகிறது. அதோடு டாக்டர் ஒருவரின் கூற்றுப்படி நான்கு வயது பிள்ளைகளுக்கு முகக்கவசம் பொருத்தமானதாக இருக்காது என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் அதைப் பயன்படுத்த பக்குவப்படாதவர்கள். மூச்சுவிட சிரமப்படுவார்கள்
பெரியவர்கள் பயன்படுத்தும் முகக்கவசங்களைப் பிள்ளைகள் பயன்படுத்துவது ஏற்புடையதும் அல்ல. நான்கு வயது பிள்ளைகளை பாலர் பள்ளி எதிர்பார்ப்பதும் முறையல்ல. நிலைமை முற்றாகச் சீராகும் வரை காத்திருக்கலாம்.
ஓரளவு விவரம் தெரிந்த மாணவர்களுக்கு தலையில் அணியும் பிளாஸ்டிக் முகக்கவசங்களே பொருத்தமாகவும் இலகுவகவும் மூச்சு விட தோதாகவும் இருக்கும், சுத்தப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
புதிய மீட்சித் திட்டம் ஒன்றுதான் இதற்கெல்லாம் சரியான வழியாக இருக்கும் என்பதால், பிள்ளைகள் நலன் கருதி அதைப் பின்பற்றுமாறு பல பெற்றோர்கள் பாலர்ப்பள்ளி ஆசிரியர்களிடம் கூறியிருக்கின்றனர்.