மியான்மாரில் பச்சை மரகதக்கல் எடுக்கும் சுரங்கத்தில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மாரின் வடக்கில் பச்சை மரகதக்கல் எடுக்கும் சுரங்கம் இருக்கிறது. இங்கு வியாழக்கிழமை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், மண் சரிந்து சுரங்கத்திற்குள் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை மூடியது.
இதுகுறித்து முநூலில் பதிவு செய்திருக்கும் தீயணைப்புப் படையினர், மியான்மாரின் வடக்குப் பகுதியில் கச்சின் மாநிலத்தில் பாகந்த் என்ற இடத்தில் விலையுயர்ந்த பச்சை மரகதக் கல் எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வேகமாக மணல் காற்று வீசியது. இதைத் தொடர்ந்து பலத்த மழையும் பெய்தது. அப்போது சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மணலால் மூடப்பட்டு இறந்தனர். இதுவரை 50 பேரின் உடல்களைத்தான் மீட்புப்பணி தொடர்கிறது செய்தி அறிவித்திருக்கிறது.