வாய்மொழி துஷ்பிரயோகம் மரணத்தின் சங்கமமானது

வாய்மொழி துஷ்பிரயோகங்களைத் தாங்கிக்கொள்ள முடியாத    தென் கொரிய முத்தரப்பு வீராங்கனை ஒருவர்  தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்பட்டிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு தைபேயில் நடைபெற்ற ஆசிய டிரையத்லான் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் பெண்கள் போட்டியில் வெண்கலம் வென்ற சோய் சுக்-ஹியோன் 22, கடந்த மாதம் பூசனில் உள்ள தனது அணி ஓய்வறையில் இறந்துகிடந்ததாகக்  கூறப்படுகிறது.

தனது தாயுடன் கடைசியான உரையாடலில், தன்னை துஷ்பிரயோகம் செய்தவர்களின் பாவங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள்  என்று கெஞ்சியிருப்பதாகத்தெரிகிறது.

ஆனால், ஏற்கெனவே தீவிரமாப் போட்டியிடும் சமூகத்தில், வெற்றி என்பது  விளையாட்டுக்கு உரித்தானது. இதில், உடல், வாய்மொழி துஷ்பிரயோகம் பரவலாகக் காணக்கூடியதே!

சோய் 2016 தேசிய சாம்பியன்ஷிப் பெண்கள் பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்தார், ஆனால், தனது ஆரம்ப வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டார், கடந்த ஆண்டு இதே போட்டியில் 14 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

உடல் ரீதியான துஷ்பிரயோகத்தின் ஆடியோ பதிவுகளை சோய் தொகுத்ததாக தென் கொரிய ஊடகங்களில் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேபிள் செய்தி நிலையமான ஒய்.டி.என் ஒளிபரப்பிய தொகுப்பில் அவரது பயிற்சியாளர் கோபத்தில் இருந்தார். மூன்று நாட்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்  என்று அவர் கூறியிருக்கிறார்.

எடை கட்டுப்பாட்டைக்கடைபிடிக்கத் தவறியதற்குத் தண்டனையாக 200,000 மதிப்புள்ள (166 அமெரிக்க டாலர்) ரொட்டியை அணி அதிகாரிகள் உண்ணச்சொல்லிக் கட்டாயப்படுத்தினராம். வழக்கமாக  அடித்ததாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை கோரி சோய் ஏப்ரல் மாதம் கொரிய விளையாட்டு ஒலிம்பிக் கமிட்டியில் (கே.எஸ்.ஓ.சி) புகாரும் செய்திருக்கிறார்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை  எடுப்பதாக  உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here