சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 வெளியீட்டு விவரம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 3 சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி வாட்ச் 3 மாடல் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய தலைமுறை கேலக்ஸி வாட்ச் 41எம்எம் மற்றும் 45எம்எம் என இருவித டையல் அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது.
 கேலக்ஸி வாட்ச்
இரு மாடல்களிலும் 8 ஜிபி மெமரி, 1 ஜிபி ரேம், ஜிபிஎஸ், 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் எம்ஐஎல் எஸ்டிடி 810ஜி தர சான்று பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி வாட்ச் 3 பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
இத்துடன் கேலக்ஸி வாட்ச் 3 மாடல் எல்டிஇ மற்றும் எல்டிஇ இல்லாத வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இரு வேரியண்ட்களும் 41எம்எம் மற்றும் 45எம்எம் டையல் ஆப்ஷன்களில் கிடைக்கும். இத்துடன் இரு வேரியண்ட்களிலும் முறையே 247 எம்ஏஹெச் மற்றும் 340 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here