கம்பார்,
பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஹாஜி சராணியை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்ததாக பேராக் மாநில ஒன்றுபட்ட ஐ.பி.எப் கட்சி தலைவர் அ. தங்கையா கூறினார்.
மாநில அம்னோ தலைவருமாகிய சராணியை செயலகத்தில் சந்தித்த வேளையில், கட்சியின் ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் இருக்கும் என்பதை தெரிவித்தோம்.
கட்சி எல்லா காலக்கட்டத்திலும் தேசிய முன்னணிக்கு துணை நின்றுள்ளது. இனி வரும் காலங்களிலும் அதனை பின்பற்றும் என தமது வாக்குறுதியை வழங்கியதாக அவர் சொன்னார்.
கட்சியின் தேசிய தலைவர் டத்தோ கே. பஞ்சமூர்த்தி, செயலாளர் பி.சம்பந்தராவ் ஆகியோருடன் கட்சியின் மாநில பொறுப்பாளர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரி ராஜா