பிறை,
ம.இ.கா பத்து கவான் தொகுதியின் ஏற்பாட்டில், தாமான் இன்ராவாசி ஜாயா கிளையின் ஆதரவுடன் இங்குள்ள வசதி குறைந்த 20 இந்திய குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன என்று தொகுதித் தலைவர் சூ.இராமலிங்கம் தெரிவித்தார்.
ம.இ.கா பாயான் பாரு தொகுதியின் செயலாளரும், தொழில் முனைவருமான திவாகரன் சுப்பிரமணி இப்பொருளுதவிக்கான செலவினை ஏற்றுக்கொண்டார். இங்கு பேசிய ம.இ.கா பினாங்கு மாநிலத் தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ மு.ஞானசேகரன் திவாகரன் இங்கு மட்டுமல்லாமல் மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மக்களுக்கு இத்தகைய உதவிகள் செய்துள்ளார் என கூறினார்.
தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிமுகப்படுத்திய ம.இ.கா உதவி திட்டத்திற்கு, வலுசேர்க்கும் வகையில் இவரது நல்லுதவிகள் மக்களின் சுமைகளை குறைக்கின்றன.
இந்நிகழ்வில் ம.இ.கா பத்து காவான் தொகுதியின் துணைத் தலைவர் மு.வ.கலைமணி, தொகுதிப் பொருளாளர் க.சேகர், பிறை வட்டார கிளைத் தலைவர்கள் மு.ஞானசேகரன், சுரேஷ், சியாம் சேகர், தர்மலிங்கம், தொகுதி இளைஞர் பகுதித் தலைவர் இளமாறன் மற்றும் இளைஞர் பொறுப்பாளர்,பாயான் பாரு தொகுதியைச் சேர்ந்த ரா.சசிகுமார், மேத்தியூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-கவின்மலர்