தொற்றைத்தடுப்பதில் பிரகாசமான வெற்றி

புதிய கொரோனா வைரஸைத் தடுத்து நிறுத்துவதில் தனது நாட்டின் பிரகாசமான வெற்றி என்று வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் பாராட்டியுள்ளார். இதை, அரசு நடத்தும் கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

வட கொரியா எல்லைகளை மூடி ஆயிரக்கணக்கானவர்களை தனிமைப்படுத்திய ஆறு மாதங்களுக்குப் பிறகு, வைரஸின் தாக்கம் குறித்து வியாழக்கிழமை ஒரு தொழிலாளர் கட்சி அரசியல் கூட்டத்தில் ஹெர்மீடிக் சர்வாதிகார அரசின் தலைவர் பேசினார்.

முயற்சிகளை மறுஆய்வு செய்த பின்னர், வீரியம் மிக்க வைரஸின் ஊடுருவலை நாங்கள் முற்றிலுமாகத் தடுத்துள்ளோம் என்றும் உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும் நிலையான தொற்றுநோய்க் எதிர்ப்பு நிலைமையைப் பேணுகிறோம் என்றும் கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

குழுவின் தொலைநோக்குத் தலைமையால் அடைந்த பிரகாசமான வெற்றியை கிம் பாராட்டினார், மேலும் குழுவின் உத்தரவின் பேரில் அனைத்து மக்களும் காட்டிய உயர்ந்த தன்னார்வ மனப்பான்மை என்று கே.சி.என்.ஏ அறிவித்திருக்கிறது.

ஆனால், அண்டை நாடுகளில் அதிகபட்ச விழிப்புணர்வைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

அண்டை நாடான சீனாவில் முதன்முதலில் தொற்றிய கோரோனா ஆதிக்கத்திலும்  உலகை வீழ்த்திய கொடிய நோயிலும் ஒருவரையும்  பியோங்யாங் உறுதிப்படுத்தவில்லை, ஆனால், அதன் எல்லைகளையும் பள்ளிகளையும் மூடுவது ஆயிரக்கணக்கான மக்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட கடுமையான விதிகளைப்  பின்பற்றியிருக்கிறது.

ஆய்வாளர்கள் கூறுகையில், வடக்கிலிருந்து வைரஸ்கள் தொற்றுநோய்களைத் தவிர்ப்பது சாத்தியமில்லை, மேலும் அதன் மோசமான சுகாதார அமைப்பு ஒரு பெரிய பிரச்சினையாகவே இருக்கும். அதைச் சமாளிக்க போராடக்கூடும் என்றும் கூறினர்.

கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் ஒருவர் உணவுப் பாதுகாப்பின்மை ஆழமடைந்து வருவதாகவும், தொற்றைத்  தடுக்கும் வட கொரியாவின் முயற்சிகளின் விளைவாக, சிலர் பட்டினி கிடக்கின்றனர்  என்று எச்சரித்திருந்தார்.

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு முன்னர், வட கொரியாவில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே உணவுப் பிரச்சினையை எதிர் நோக்கியதாகவும் பலர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here