இந்நிலையில், போயஸ் கார்டனில் ஒரு பகுதியை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா, தீபக் ஆகியோர் இன்று சென்னை கிண்டி கோட்டாட்சியர் என்.லெட்சுமியிடம் மனு அளித்தனர். ஜெ.தீபா, தீபக் சார்பில் வழக்கறிஞர்கள் சுதர்சன், சுப்பிரமணி ஆகியோர் இந்த மனுக்களை அளித்தனர்.
அதில், ஐகோர்ட் உத்தரவின்படி ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு ஜெ.தீபா, தீபக் தான் வாரிசுதாரர்கள் எனவும் அவர்களின் அனுமதி இன்றி நினைவில்லம் அமைக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.